• Feb 10 2025

30 பேருடன் பயணித்த பேருந்து வீட்டின் மதிலுக்குள் புகுந்து விபத்து

Chithra / Nov 10th 2024, 11:47 am
image


பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீடொன்றின் மதிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் சுமார் 30 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து படலபிட்டிய பிரதேசத்தில் வேக கட்டுப்பாட்டை இழந்து  வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வீடொன்றின் மதிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தின் சாரதிக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மற்ற பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், பேருந்து விபத்துக்குள்ளான போது, ​​வீட்டில் ஒரு சிறு குழந்தை மற்றும் ஒரு தம்பதி இருந்த நிலையில் அவர்கள் ஒரே அறையில் இருந்ததால், குடியிருப்பாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

 விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  


30 பேருடன் பயணித்த பேருந்து வீட்டின் மதிலுக்குள் புகுந்து விபத்து பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீடொன்றின் மதிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்துச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் சுமார் 30 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து படலபிட்டிய பிரதேசத்தில் வேக கட்டுப்பாட்டை இழந்து  வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வீடொன்றின் மதிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் பேருந்தின் சாரதிக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மற்ற பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன், பேருந்து விபத்துக்குள்ளான போது, ​​வீட்டில் ஒரு சிறு குழந்தை மற்றும் ஒரு தம்பதி இருந்த நிலையில் அவர்கள் ஒரே அறையில் இருந்ததால், குடியிருப்பாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement