இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று மரத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துச் சம்பவம் வாரியபொல அத்தவ பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து, வீதியின் ஓரத்தில் இருந்த கும்புக் மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது.
விபத்தில் பேருந்து சாரதி உள்ளிட்ட 12 பேர் காயமடைந்து நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நிக்கவரட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மரத்துடன் மோதிய பேருந்து - 12 பேர் காயம் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று மரத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் வாரியபொல அத்தவ பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து, வீதியின் ஓரத்தில் இருந்த கும்புக் மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. விபத்தில் பேருந்து சாரதி உள்ளிட்ட 12 பேர் காயமடைந்து நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நிக்கவரட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.