யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகனான இளைஞன் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் பெரியவிளான் - பத்திரிமா தேவாலயத்திற்கு அருகில் வசிக்கும் 76 வயதான மோ.பாக்கியநாதன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த இருவரும் நேற்றிரவு 9.30 மணியளவில் பெரியவிளான், பத்திரிமா தேவாலயத்திற்கு அருகாமையில் வீதியில் நின்றபோது,
சேவையை முடித்துவிட்டு சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து தந்தை, மகன் ஆகிய இருவர் மீதும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை பேருந்தின் சாரதி தப்பிச் சென்ற நிலையில், பேருந்தை எடுத்துச் சென்ற இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் வீதியில் நின்றவர்களை மோதிய பேருந்து; தந்தை பலி மகன் படுகாயம் - சாரதி தப்பியோட்டம் யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.நேற்றிரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகனான இளைஞன் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த விபத்தில் பெரியவிளான் - பத்திரிமா தேவாலயத்திற்கு அருகில் வசிக்கும் 76 வயதான மோ.பாக்கியநாதன் என்பவரே உயிரிழந்துள்ளார்.குறித்த இருவரும் நேற்றிரவு 9.30 மணியளவில் பெரியவிளான், பத்திரிமா தேவாலயத்திற்கு அருகாமையில் வீதியில் நின்றபோது,சேவையை முடித்துவிட்டு சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து தந்தை, மகன் ஆகிய இருவர் மீதும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.இதேவேளை பேருந்தின் சாரதி தப்பிச் சென்ற நிலையில், பேருந்தை எடுத்துச் சென்ற இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.