இலங்கைப் போக்குவரத்துக்குச் சொந்தமான பேருந்தில் ஆசன ஒதுக்கீடு செய்த பயணிகளை ஏற்றிச் செல்லவில்லை என்று பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளின் செயற்பாட்டால் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு மூன்று பயணிகள் நீர்கொழும்பு வயிக்கால பகுதியில் இருந்து 36,37,40 போன்ற ஆசனங்களை ND 9933 இலக்க இ.போ.ச பேருந்தில் முன்பதிவு செய்துள்ளனர்.
பின்னர் பேருந்தானது 11:45 மணியளவில் குறித்த பிரதேசத்திற்கு வருகை தரும் என நடத்துனரால் தெரிவித்த நிலையில் குறித்த நபர்கள் 11 மணியளவில் இருந்து 11:30 மணிவரை நடத்துனரிடம் தொலைபேசி அழைப்பு மூலம் தமது வருகைக்கான காத்திருப்பை உறுதி செய்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக 11:45 மணியளவில் குறிப்பிட்ட பிரதேசத்தை கடந்து அதிக வேகத்தில் பயணிகளை ஏற்றாமல் பேருந்து சென்றுள்ளது. உரிய பேருந்து நடத்துனரிடம் தொலைபேசி அழைப்பு எடுக்க முயன்ற போது நடத்துனரிடம் இருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.
பின்னர் தொலைபேசி அழைப்பை ஏற்றுக்கொண்ட நடத்துனர் தமது பேருந்தானது குறிப்பிட்ட இடத்தை கடந்து 10KM ற்கு அப்பால் சென்று விட்டது. எப்படியாவது தாம் காத்திருக்கிறோம். வருகை தந்து பயணத்தை தொடருமாறு கூறப்பட்டது.
இந்நிலையில் குறித்த பேருந்தில் சென்றுகொண்டிருந்த தமது நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டு தமது நிலமை தொடர்பாக பயணிகள் கூறிய போது, குறித்த நண்பர் குறித்த மூன்று முன் பதிவு செய்த ஆசனங்களில் கொழும்பில் இருந்தே பயணிகள் நடத்துனரால் அமர வைத்து ஏற்றிச்செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நடத்துனர் மற்றும் சாரதி என்பவரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி மற்றும் தமது சொந்த தேவைக்காக பணத்தை சேமிக்கவே இந்த செயல் இடம்பெற்றது என்று பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக இலங்கை போக்குவரத்து சபை பெறுப்பதிகாரியிடம் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்பு கொண்டபோது அவர்கள் பொறுப்பில்லாமல் பதிலளித்துள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகள் அண்மைக்காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இ.போ.ச பேருந்துகள் இலாப நோக்கோடு செயற்படாமல் மக்களின் சேவைக்காக செயற்பட வேண்டும் என்று அரசாங்கத்திடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசன ஒதுக்கீடு செய்த பயணிகளை நடுவீதியில் விட்டுச் சென்ற பேருந்து; இ.போ.ச சாரதி, நடத்துநர்களின் சுயலாப செயல் - பயணிகள் விசனம் இலங்கைப் போக்குவரத்துக்குச் சொந்தமான பேருந்தில் ஆசன ஒதுக்கீடு செய்த பயணிகளை ஏற்றிச் செல்லவில்லை என்று பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளின் செயற்பாட்டால் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு மூன்று பயணிகள் நீர்கொழும்பு வயிக்கால பகுதியில் இருந்து 36,37,40 போன்ற ஆசனங்களை ND 9933 இலக்க இ.போ.ச பேருந்தில் முன்பதிவு செய்துள்ளனர். பின்னர் பேருந்தானது 11:45 மணியளவில் குறித்த பிரதேசத்திற்கு வருகை தரும் என நடத்துனரால் தெரிவித்த நிலையில் குறித்த நபர்கள் 11 மணியளவில் இருந்து 11:30 மணிவரை நடத்துனரிடம் தொலைபேசி அழைப்பு மூலம் தமது வருகைக்கான காத்திருப்பை உறுதி செய்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக 11:45 மணியளவில் குறிப்பிட்ட பிரதேசத்தை கடந்து அதிக வேகத்தில் பயணிகளை ஏற்றாமல் பேருந்து சென்றுள்ளது. உரிய பேருந்து நடத்துனரிடம் தொலைபேசி அழைப்பு எடுக்க முயன்ற போது நடத்துனரிடம் இருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.பின்னர் தொலைபேசி அழைப்பை ஏற்றுக்கொண்ட நடத்துனர் தமது பேருந்தானது குறிப்பிட்ட இடத்தை கடந்து 10KM ற்கு அப்பால் சென்று விட்டது. எப்படியாவது தாம் காத்திருக்கிறோம். வருகை தந்து பயணத்தை தொடருமாறு கூறப்பட்டது. இந்நிலையில் குறித்த பேருந்தில் சென்றுகொண்டிருந்த தமது நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டு தமது நிலமை தொடர்பாக பயணிகள் கூறிய போது, குறித்த நண்பர் குறித்த மூன்று முன் பதிவு செய்த ஆசனங்களில் கொழும்பில் இருந்தே பயணிகள் நடத்துனரால் அமர வைத்து ஏற்றிச்செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.இதனையடுத்து நடத்துனர் மற்றும் சாரதி என்பவரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி மற்றும் தமது சொந்த தேவைக்காக பணத்தை சேமிக்கவே இந்த செயல் இடம்பெற்றது என்று பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக இலங்கை போக்குவரத்து சபை பெறுப்பதிகாரியிடம் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்பு கொண்டபோது அவர்கள் பொறுப்பில்லாமல் பதிலளித்துள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் அண்மைக்காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இ.போ.ச பேருந்துகள் இலாப நோக்கோடு செயற்படாமல் மக்களின் சேவைக்காக செயற்பட வேண்டும் என்று அரசாங்கத்திடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.