• Sep 19 2024

கட்டுப்பாட்டை இழந்த பஸ் - 8 பேர் வைத்தியசாலையில்! samugammedia

Chithra / Jul 10th 2023, 5:21 pm
image

Advertisement

புத்தளம் பகுதியிலிருந்து  நுவரெலியா நகரை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று நுவரெலியா - கண்டி பிரதான வீதியில்  ஹெல்பொட கட்டுக்கித்துல பகுதியில் பிரதான வீதியிலேயே குடைசாய்ந்துள்ளது.

புத்தளத்திலிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு நுவரெலியா பகுதிக்கு சென்ற குறித்த பஸ் பிற்பகல் 12.30 மணியளவில் வீதியிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 22 பேரில் 8 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பஸ் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக சாரதி கட்டுப்பாட்டை இழந்ததனால் இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 08 பேரில், கொத்மலை வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சைக்காக 4 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் நால்வர் புஸ்ஸலாவ வகுக்கப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்விபத்து தொடர்பில் புஸ்ஸலாவ போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கட்டுப்பாட்டை இழந்த பஸ் - 8 பேர் வைத்தியசாலையில் samugammedia புத்தளம் பகுதியிலிருந்து  நுவரெலியா நகரை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று நுவரெலியா - கண்டி பிரதான வீதியில்  ஹெல்பொட கட்டுக்கித்துல பகுதியில் பிரதான வீதியிலேயே குடைசாய்ந்துள்ளது.புத்தளத்திலிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு நுவரெலியா பகுதிக்கு சென்ற குறித்த பஸ் பிற்பகல் 12.30 மணியளவில் வீதியிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 22 பேரில் 8 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.பஸ் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக சாரதி கட்டுப்பாட்டை இழந்ததனால் இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.இவ்விபத்தில் காயமடைந்த 08 பேரில், கொத்மலை வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சைக்காக 4 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் நால்வர் புஸ்ஸலாவ வகுக்கப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.இவ்விபத்து தொடர்பில் புஸ்ஸலாவ போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement