கலால் திணைக்களத்திற்கான வருமான நிர்வாக முறைமை ஒன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கை கலால் திணைக்களம் வருமானம் ஈட்டும் திணைக்களமாக இருந்தாலும், திணைக்களத்தில் தற்போதுள்ள பழைய முறைமைகள் அதன் வருவாய் நிர்வாகச் செயற்பாடுகளுக்குத் துணைபுரிவதில் பயனற்றவையாக இருப்பதால், வருமானக் கசிவு மற்றும் முறைகேடுகள் ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கும் ஏனைய தொடர்புடைய தரப்பினருக்கும் அதனைப் பெறுவது கடினமாக காணப்பட்டதுடன், ஏனைய நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதில் சிக்கல் நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றும் வகையில் மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைப்பை நிறுவும் நோக்கில், இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு வருமான நிர்வாக முறைமையை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவு நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கலால் திணைக்களத்திற்கான வருமான நிர்வாக முறைமையை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம். கலால் திணைக்களத்திற்கான வருமான நிர்வாக முறைமை ஒன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இலங்கை கலால் திணைக்களம் வருமானம் ஈட்டும் திணைக்களமாக இருந்தாலும், திணைக்களத்தில் தற்போதுள்ள பழைய முறைமைகள் அதன் வருவாய் நிர்வாகச் செயற்பாடுகளுக்குத் துணைபுரிவதில் பயனற்றவையாக இருப்பதால், வருமானக் கசிவு மற்றும் முறைகேடுகள் ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கும் ஏனைய தொடர்புடைய தரப்பினருக்கும் அதனைப் பெறுவது கடினமாக காணப்பட்டதுடன், ஏனைய நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதில் சிக்கல் நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றும் வகையில் மிகவும் திறமையான மற்றும் பயனுள்ள தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைப்பை நிறுவும் நோக்கில், இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு வருமான நிர்வாக முறைமையை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவு நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.