• Nov 22 2024

இரு முக்கிய நியமனங்களுக்கு அனுமதி வழங்கிய அமைச்சரவை..!

Chithra / Oct 8th 2024, 12:03 pm
image

 

தேசிய சேவைகளை வலுப்படுத்துதல் மற்றும் அரசாங்கத்தின் வருமான இலக்குகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்யும் நோக்கில் இரண்டு முக்கிய நியமனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான எம்.எஸ்.பி.சூரியப்பெரும ஆட்பதிவுக்கான பதில் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2024 செப்டெம்பர் 24 ஆம் திகதி முதல் இப்பதவி வெற்றிடமாக உள்ளது.

சூரியப்பெரும தற்போது பொது பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றி வருகின்றார் மேலும் அவர் உடனடியாக தனது புதிய பொறுப்புக்களை ஏற்கவுள்ளார்.

இதேவேளை, ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிய திரு.ஜே.எம்.குணசிறிக்குப் பதிலாக புதிய கலால் ஆணையாளர் நாயகமாக யு.டி.என்.ஜெயவீரவை நியமிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உள்நாட்டு இறைவரி சேவையின் அனுபவம் வாய்ந்த அதிகாரி ஜெயவீர, நல்லாட்சியை உறுதிசெய்து அதன் வருவாய் இலக்குகளை அடைவதில் திணைக்களத்தை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு முக்கிய நியமனங்களுக்கு அனுமதி வழங்கிய அமைச்சரவை.  தேசிய சேவைகளை வலுப்படுத்துதல் மற்றும் அரசாங்கத்தின் வருமான இலக்குகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்யும் நோக்கில் இரண்டு முக்கிய நியமனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அதன்படி, இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான எம்.எஸ்.பி.சூரியப்பெரும ஆட்பதிவுக்கான பதில் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.2024 செப்டெம்பர் 24 ஆம் திகதி முதல் இப்பதவி வெற்றிடமாக உள்ளது.சூரியப்பெரும தற்போது பொது பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றி வருகின்றார் மேலும் அவர் உடனடியாக தனது புதிய பொறுப்புக்களை ஏற்கவுள்ளார்.இதேவேளை, ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றிய திரு.ஜே.எம்.குணசிறிக்குப் பதிலாக புதிய கலால் ஆணையாளர் நாயகமாக யு.டி.என்.ஜெயவீரவை நியமிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.உள்நாட்டு இறைவரி சேவையின் அனுபவம் வாய்ந்த அதிகாரி ஜெயவீர, நல்லாட்சியை உறுதிசெய்து அதன் வருவாய் இலக்குகளை அடைவதில் திணைக்களத்தை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement