• Apr 01 2025

வேலையற்ற பட்டதாரிகளுக்கான கட்டாய ஒன்றுகூடலுக்கு அழைப்பு...!

Sharmi / Jun 27th 2024, 1:27 pm
image

வேலையற்ற பட்டதாரிகளுக்கான கட்டாய ஒன்றுகூடல் யாழ்ப்பாணம் கண்டி வீதியில் உள்ள திருமறைக் கலா மன்ற மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(30) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

வட மாகாணத்தில் காணப்படுகின்ற அனைத்து வெற்றிடங்களையும் நிரப்பும் நோக்கில், வடமாகாண ஆளுநரிடம் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

அதற்கு அமைவாக இச்செயல் திட்டத்தை விரைவாக முன்னெடுக்கும் நோக்கிலும், ஜனாதிபதியை நேரடியாக சந்திப்பதற்கான வாய்ப்பை ஆளுநர் பெற்றுத்தர உறுதி கூறியமையாலும் நமது ஏற்பாடுகளை விரைவாக முன்னெடுக்க வேண்டிய கடமை எங்களிடம் உள்ளது.

அதனால் முக்கிய தீர்மானங்களை திட்டமிடுவதற்காக வடமாகாண வேலையில்லா பட்டதாரிகளை, தவறாது கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கான கட்டாய ஒன்றுகூடலுக்கு அழைப்பு. வேலையற்ற பட்டதாரிகளுக்கான கட்டாய ஒன்றுகூடல் யாழ்ப்பாணம் கண்டி வீதியில் உள்ள திருமறைக் கலா மன்ற மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(30) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.வட மாகாணத்தில் காணப்படுகின்ற அனைத்து வெற்றிடங்களையும் நிரப்பும் நோக்கில், வடமாகாண ஆளுநரிடம் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு அமைவாக இச்செயல் திட்டத்தை விரைவாக முன்னெடுக்கும் நோக்கிலும், ஜனாதிபதியை நேரடியாக சந்திப்பதற்கான வாய்ப்பை ஆளுநர் பெற்றுத்தர உறுதி கூறியமையாலும் நமது ஏற்பாடுகளை விரைவாக முன்னெடுக்க வேண்டிய கடமை எங்களிடம் உள்ளது. அதனால் முக்கிய தீர்மானங்களை திட்டமிடுவதற்காக வடமாகாண வேலையில்லா பட்டதாரிகளை, தவறாது கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement