• Oct 30 2026

அனர்த்தத்தை எதிர்கொள்ள அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம்

Ziya / Oct 29th 2026, 4:55 pm
image


வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாட்டு அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் தம்பலாகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று இடம் பெற்றன.


தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில்  வடகிழக்கு பருவமழையினால் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தங்களின் பாதிப்புகளைக் குறைத்து, பொதுமக்களின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.


இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச் தாலிப் அலி உட்பட இராணுவ அதிகாரி, அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர்,துறைசார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இதன் போது அனர்த்த காலங்களில் இராணுவத்தினரின் உதவி கிடைக்கப்பெறும் என இராணுவ உயரதிகாரி இதன் போது தெரிவித்துள்ளார்.மேலும் தம்பலாகாமம் பிரதேச சபை மூலமாக செய்யப்பட வேண்டிய இனங்கானப்பட்ட நீர் வடிந்தோடக்கூடிய பகுதிகளை தம்பலாகாமம் பிரதேச செயலக உதவியுடன் மேற்கொள்ள நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு, பலத்த காற்று உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களின் தாக்கங்களைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அனர்த்த முகாமைத்துவத் திட்டங்கள் மற்றும் அவசரகால நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக இதன்போது மேலும் கலந்துரையாடப்பட்டன.


வடகிழக்கு பருவமழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைக் குறைப்பதற்கும், பாதிப்புகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் துரிதமாகச் செயற்படுவதற்கும் தேவையான நடவடிக்கைகளைத் திட்டமிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதாகவும் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றிருந்தன.

அனர்த்தத்தை எதிர்கொள்ள அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாட்டு அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் தம்பலாகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று இடம் பெற்றன.தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில்  வடகிழக்கு பருவமழையினால் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தங்களின் பாதிப்புகளைக் குறைத்து, பொதுமக்களின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச் தாலிப் அலி உட்பட இராணுவ அதிகாரி, அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர்,துறைசார் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இதன் போது அனர்த்த காலங்களில் இராணுவத்தினரின் உதவி கிடைக்கப்பெறும் என இராணுவ உயரதிகாரி இதன் போது தெரிவித்துள்ளார்.மேலும் தம்பலாகாமம் பிரதேச சபை மூலமாக செய்யப்பட வேண்டிய இனங்கானப்பட்ட நீர் வடிந்தோடக்கூடிய பகுதிகளை தம்பலாகாமம் பிரதேச செயலக உதவியுடன் மேற்கொள்ள நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு, பலத்த காற்று உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களின் தாக்கங்களைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அனர்த்த முகாமைத்துவத் திட்டங்கள் மற்றும் அவசரகால நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக இதன்போது மேலும் கலந்துரையாடப்பட்டன.வடகிழக்கு பருவமழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைக் குறைப்பதற்கும், பாதிப்புகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் துரிதமாகச் செயற்படுவதற்கும் தேவையான நடவடிக்கைகளைத் திட்டமிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதாகவும் குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றிருந்தன.

Advertisement

Advertisement

Advertisement