• Oct 29 2026

மாதாந்த பொது மக்கள் குறைகேள் சந்திப்பில் மாநகரசபை உறுப்பினர் அப்துல்லாஹ் பங்கேற்பு

Aathira / Oct 29th 2026, 8:19 am
image

யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர் என்.எம்.அப்துல்லாஹ் அவர்களின் மாதாந்த பொது மக்கள் குறைகேள் சந்திப்பு அண்மையில் 13ஆம் வட்டாரம் ஜே 86 சோனகதெரு தெற்கு காமால் லேன் பகுதியில் இடம்பெற்றது.

கலந்துரையாடலில் பொது மக்கள் முன்வைத்த கோரிக்கையான மின்விளக்கு திருத்தம் அடுத்த வட்டார சுற்றுக்கான கால அட்டவணையின் போது விரைவில் சீர் செய்துதரப்படும் என உறுப்பினர் குறிப்பிட்டதுடன், 

வயல் ஒழுங்கை, காமால் லேன் பகுதியில் திண்மக்கழிவகற்றல் வாகனம் வராமை தொடர்பான முறைப்பாட்டிற்கு உடனடியாக மேற்பார்வையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்தல் அப்புறப்படுத்த தீர்வைப்பெற்றுக் கொடுத்தார்.

மேலும் மாநகரசபை உறுப்பினர் அப்துல்லாஹ் கருத்து வெளியிடுகையில் மாநகரசபையினால் வட்டார நிதி ஒதுக்கீட்டில் 13ஆம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வடிகால் அமைத்தல் வேலைத்திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியதுடன், வட்டாரத்தில் முன்னெடுக்கப்படும் திண்மக்கழிவகற்றல் சேவை கால அட்டவணை தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.

விசேடமாக வயல் ஒழுங்கை கோவில் காணி குடியிருப்பாளர்களின் காணி உரிமம் சார்ந்த சட்டப் பிரச்சினை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. 

இது தொடர்பில் பொது மக்களின் கோரிக்கை மனுவைப் பெற்று விரைவில் சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேற்படி பொது மக்கள் குறைகேள் கலந்துரையாடலில் மாநகரசபை உறுப்பினர் ஆர்.எப்.றிஸ்லா, மாநகரசபை உறுப்பினர் அப்துல்லாஹ் அவர்களின் செயலாளர் எஸ்.எம்.சசான், ஜே 86 கிராம பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மாதாந்த பொது மக்கள் குறைகேள் சந்திப்பில் மாநகரசபை உறுப்பினர் அப்துல்லாஹ் பங்கேற்பு யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர் என்.எம்.அப்துல்லாஹ் அவர்களின் மாதாந்த பொது மக்கள் குறைகேள் சந்திப்பு அண்மையில் 13ஆம் வட்டாரம் ஜே 86 சோனகதெரு தெற்கு காமால் லேன் பகுதியில் இடம்பெற்றது.கலந்துரையாடலில் பொது மக்கள் முன்வைத்த கோரிக்கையான மின்விளக்கு திருத்தம் அடுத்த வட்டார சுற்றுக்கான கால அட்டவணையின் போது விரைவில் சீர் செய்துதரப்படும் என உறுப்பினர் குறிப்பிட்டதுடன், வயல் ஒழுங்கை, காமால் லேன் பகுதியில் திண்மக்கழிவகற்றல் வாகனம் வராமை தொடர்பான முறைப்பாட்டிற்கு உடனடியாக மேற்பார்வையாளரின் கவனத்திற்கு கொண்டு சென்று அடுத்தல் அப்புறப்படுத்த தீர்வைப்பெற்றுக் கொடுத்தார்.மேலும் மாநகரசபை உறுப்பினர் அப்துல்லாஹ் கருத்து வெளியிடுகையில் மாநகரசபையினால் வட்டார நிதி ஒதுக்கீட்டில் 13ஆம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வடிகால் அமைத்தல் வேலைத்திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியதுடன், வட்டாரத்தில் முன்னெடுக்கப்படும் திண்மக்கழிவகற்றல் சேவை கால அட்டவணை தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.விசேடமாக வயல் ஒழுங்கை கோவில் காணி குடியிருப்பாளர்களின் காணி உரிமம் சார்ந்த சட்டப் பிரச்சினை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இது தொடர்பில் பொது மக்களின் கோரிக்கை மனுவைப் பெற்று விரைவில் சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.மேற்படி பொது மக்கள் குறைகேள் கலந்துரையாடலில் மாநகரசபை உறுப்பினர் ஆர்.எப்.றிஸ்லா, மாநகரசபை உறுப்பினர் அப்துல்லாஹ் அவர்களின் செயலாளர் எஸ்.எம்.சசான், ஜே 86 கிராம பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement