இலங்கையில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்றுவரும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
பயனாளிகளைத் தெரிவு செய்யும் புதிய நடைமுறையால் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி, இனிவரும் காலங்களில் தீவிர வறுமை மற்றும் வறுமை ஆகிய இரண்டு பிரிவுகளுக்கு மட்டுமே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
இதன்படி, தீவிர வறுமைப் பிரிவினருக்கு மாதாந்தம் 17,500 ரூபாயும், வறுமைப் பிரிவினருக்கு 10,000 ரூபாயும் வழங்கப்படும்.
ஆனால், புதிய நடைமுறையின் கீழ் 13 இலட்சத்து 91 ஆயிரத்து 830 பேர் அஸ்வெசும திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
முதலாவது பட்டியலில் 9 இலட்சத்து 91 ஆயிரத்து 800 பேர் மாத்திரமே தகுதி பெற்றுள்ளனர்.
இதற்கிடையில், புதிய பெயர் பட்டியல் பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியல் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை இன்று ஒக்டோபர் 29 முதல் நவம்பர் 11ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.
மேலும், 7 இலட்சத்து 40 ஆயிரத்து 127 குடும்பங்களை உள்ளடக்கிய இரண்டாவது பெயர் பட்டியல் எதிர்வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
முதல் பட்டியலில் உள்ள, புதிதாகத் தகுதிபெற்ற பயனாளிகளுக்கான பணம் நவம்பர் 27 அன்று அவர்களது அஸ்வேசுமா வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது.
அதேவேளையில், வங்கிக் கணக்குகளைத் திறப்பதை எளிதாக்கும் கடிதங்கள் நவம்பர் 12 முதல் வழங்கப்படும்.
அஸ்வெசும பயனாளிகளுக்கு அதிர்ச்சி; புதிய பட்டியலில் பாரிய மாற்றம் இலங்கையில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்றுவரும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.பயனாளிகளைத் தெரிவு செய்யும் புதிய நடைமுறையால் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.புதிய வர்த்தமானி அறிவித்தலின்படி, இனிவரும் காலங்களில் தீவிர வறுமை மற்றும் வறுமை ஆகிய இரண்டு பிரிவுகளுக்கு மட்டுமே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.இதன்படி, தீவிர வறுமைப் பிரிவினருக்கு மாதாந்தம் 17,500 ரூபாயும், வறுமைப் பிரிவினருக்கு 10,000 ரூபாயும் வழங்கப்படும்.ஆனால், புதிய நடைமுறையின் கீழ் 13 இலட்சத்து 91 ஆயிரத்து 830 பேர் அஸ்வெசும திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.முதலாவது பட்டியலில் 9 இலட்சத்து 91 ஆயிரத்து 800 பேர் மாத்திரமே தகுதி பெற்றுள்ளனர்.இதற்கிடையில், புதிய பெயர் பட்டியல் பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இந்தப் பட்டியல் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை இன்று ஒக்டோபர் 29 முதல் நவம்பர் 11ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.மேலும், 7 இலட்சத்து 40 ஆயிரத்து 127 குடும்பங்களை உள்ளடக்கிய இரண்டாவது பெயர் பட்டியல் எதிர்வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.முதல் பட்டியலில் உள்ள, புதிதாகத் தகுதிபெற்ற பயனாளிகளுக்கான பணம் நவம்பர் 27 அன்று அவர்களது அஸ்வேசுமா வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது. அதேவேளையில், வங்கிக் கணக்குகளைத் திறப்பதை எளிதாக்கும் கடிதங்கள் நவம்பர் 12 முதல் வழங்கப்படும்.