• Nov 22 2024

அரசியலமைப்பு பேரவையால் நியமிக்கப்பட்டரை நீதிமன்றம் நீக்கமுடியுமா? வியாக்கியானத்தை கோரும் ஜனாதிபதி

Chithra / Jul 28th 2024, 1:17 pm
image


அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கிய ஒருவரை நீக்குவதற்கு உயர்நீதிமன்றத்திற்கு அரசமைப்பின் கீழ் அதிகாரம் உள்ளதா என்பது குறித்து  ஜனாபதி ரணில் விக்கிரமசிங்க உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை  கோருவதற்கு தீர்மானித்துள்ளார்.

தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராக பணியாற்றுவதற்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் தனக்கு அரசமைப்பின் கீழ் உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி ஜனாதிபதி உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை பெற முயல்வார் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வாக்கெடுப்பின் போது அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் ஒருவர் வாக்களிக்காவிட்டால் அல்லது வாக்களிப்பில் கலந்துகொள்ளாவிட்டால் அதனை ஆதரவாக கருதலாமா அல்லது எதிர்ப்பாக கருதலாமா என்பது குறித்து தெளிவான சட்டவிதிகள் இல்லாததால் இது குறித்து உயர்நீதிமன்றத்தின் தெளிவுபடுத்தல்களை ஜனாதிபதி கோரவுள்ளார்.

அதாவது அரசியலமைப்பின் 41 சி மற்றும் 41 ஜி குறித்து தெளிவான தெளிவுபடுத்தல்களை முன்வைக்குமாறு நீதிமன்றத்தை ஜனாதிபதி கோரவுள்ளார்.

அரசியலமைப்பு பேரவையால் நியமிக்கப்பட்டரை நீதிமன்றம் நீக்கமுடியுமா வியாக்கியானத்தை கோரும் ஜனாதிபதி அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கிய ஒருவரை நீக்குவதற்கு உயர்நீதிமன்றத்திற்கு அரசமைப்பின் கீழ் அதிகாரம் உள்ளதா என்பது குறித்து  ஜனாபதி ரணில் விக்கிரமசிங்க உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை  கோருவதற்கு தீர்மானித்துள்ளார்.தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராக பணியாற்றுவதற்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் தனக்கு அரசமைப்பின் கீழ் உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி ஜனாதிபதி உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை பெற முயல்வார் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.வாக்கெடுப்பின் போது அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் ஒருவர் வாக்களிக்காவிட்டால் அல்லது வாக்களிப்பில் கலந்துகொள்ளாவிட்டால் அதனை ஆதரவாக கருதலாமா அல்லது எதிர்ப்பாக கருதலாமா என்பது குறித்து தெளிவான சட்டவிதிகள் இல்லாததால் இது குறித்து உயர்நீதிமன்றத்தின் தெளிவுபடுத்தல்களை ஜனாதிபதி கோரவுள்ளார்.அதாவது அரசியலமைப்பின் 41 சி மற்றும் 41 ஜி குறித்து தெளிவான தெளிவுபடுத்தல்களை முன்வைக்குமாறு நீதிமன்றத்தை ஜனாதிபதி கோரவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement