• Apr 03 2025

16 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு - திருமலையில் சம்பவம்

Chithra / Jul 28th 2024, 1:06 pm
image

 


திருகோணமலை கல்மெட்டியாவ குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை - மனையாவளி பகுதியில் வசித்து வந்த 16 வயதுடைய எஸ். கோகுலராஜ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று  குடும்பத்தாருடன் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ குளத்துக்கு சுற்றுலா சென்ற போது நீரில் மூழ்கி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வருகின்றது.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் சாரதியின் மகனாவார். 

உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

16 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு - திருமலையில் சம்பவம்  திருகோணமலை கல்மெட்டியாவ குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.திருகோணமலை - மனையாவளி பகுதியில் வசித்து வந்த 16 வயதுடைய எஸ். கோகுலராஜ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.நேற்று  குடும்பத்தாருடன் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ குளத்துக்கு சுற்றுலா சென்ற போது நீரில் மூழ்கி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வருகின்றது.இவ்வாறு உயிரிழந்த இளைஞன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் சாரதியின் மகனாவார். உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement