• Mar 10 2026

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள் - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவுறுத்தல்!

shanu / Mar 10th 2026, 6:05 pm
image

மத்திய கிழக்கில் போரை அடுத்து ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, இயன்றவரை சிக்கனமாக எரிபொருளை பயன்படுத்துமாறு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் டி.ஜே. ராஜகருணா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஊடக சந்திப்பில் இன்று கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


எரிபொருள் பயன்பாட்டை இயன்றவரை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தில் கடந்த சில நாட்களாக மக்கள் அதிகமாக எரிபொருளை கொள்வனவு செய்துள்ளனர்.


எரிபொருள் தட்டுப்பாடானது இந்த விலை உயர்வுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இது நடக்கவில்லை என்றால், இந்த மாத இறுதி வரை இருந்த விலையில் எரிபொருளை வாங்க முடிந்திருக்கும். இருப்பினும், தற்போதைய எரிபொருள் நெருக்கடி முழு உலகையும் பாதித்து வருகிறது. 


கூட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் கடுமையான ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் டி.ஜே.ராஜகருணா மேலும் தெரிவித்துள்ளார்.

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள் - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவுறுத்தல் மத்திய கிழக்கில் போரை அடுத்து ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, இயன்றவரை சிக்கனமாக எரிபொருளை பயன்படுத்துமாறு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் டி.ஜே. ராஜகருணா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஊடக சந்திப்பில் இன்று கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் பயன்பாட்டை இயன்றவரை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தில் கடந்த சில நாட்களாக மக்கள் அதிகமாக எரிபொருளை கொள்வனவு செய்துள்ளனர்.எரிபொருள் தட்டுப்பாடானது இந்த விலை உயர்வுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இது நடக்கவில்லை என்றால், இந்த மாத இறுதி வரை இருந்த விலையில் எரிபொருளை வாங்க முடிந்திருக்கும். இருப்பினும், தற்போதைய எரிபொருள் நெருக்கடி முழு உலகையும் பாதித்து வருகிறது. கூட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் கடுமையான ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் டி.ஜே.ராஜகருணா மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement