உலகம் முழுவதும் ஆயிரத்தில் 47 பேருக்கு ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (Non-Alcoholic Fatty Liver Disease – NAFLD) ஏற்பட்டு வருகிறது என்று நஷனல் சென்டர் ஃபோர் பயோடெக்னாலஜி தகவல்கள் (NCBI) கூறுகிறது.
இது பெண்களை விட ஆண்களிடையே அதிகம் காணப்படுகிறது.
NAFLD என்பது என்ன?
முன்னர் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் என்று அழைக்கப்பட்ட கல்லீரல் நோய் (MASLD) உடல் பருமன்,நீரிழிவு மற்றும் இதய நோய்களுடன் தொடர்புடைய, கல்லீரலில் தேவையற்ற கொழுப்பு சேரும் நிலையாகும்.
இது கல்லீரல் அழற்சி (MASH), வடுக்கள், மற்றும் சில நேரங்களில் கல்லீரல் புற்றுநோய் அல்லது கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கக்கூடும்.
கல்லீரலின் முக்கியப் பணிகளாவன,
கல்லீரல் உடல் உற்பத்தி செய்யும் 500-க்கும் மேற்பட்ட வேலையை நிறைவேற்றுகிறது.
உணவு ஜீரணத்திலிருந்து பொருட்களை எடுக்கும் முதல் அடி முதல் உடல் பராமரிப்பு வரை கல்லீரல் பாதிப்பால் நிவாரணம் தேவைப்படுகிறது.
NAFLD வருவதற்கான காரணங்கள்,
உடல் பருமன், உயர் BMI, வயிறு கொழுப்பு,அதிக கலோரி உணவு, துரித உணவு, குறைந்த உடலறிஞ்சல்,புகைப்பிடித்தல், தூக்கமின்மை
"இப்போது இது ‘வளர்சிதை மாற்ற நோய்க்குழுமம்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் தாக்கம் கல்லீரலுக்கு மட்டுமல்ல, இதயத்திற்கு வரை பரவும். நீரிழிவு நோயுடன் கல்லீரல் கொழுப்பு இருந்தால் இதய நோய்கள் அதிகரிக்கும்.
அறிகுறிகள்:பெரும்பாலான நோயாளர்களுக்கு ஆரம்ப நிலை அறிகுறிகள் இல்லை,சோர்வு, உற்சாகமின்மை போன்றவை தோன்றினாலும், இதை மட்டும் கொண்டு NAFLD கண்டறிய முடியாது,அதனால் ஆபத்துள்ளவர்கள் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்.
யாருக்கு அதிக ஆபத்து?
10 வருடங்களுக்கு மேலாக நீரிழிவு நோய் கொண்டவர்கள்,BMI 23–க்கு மேல் உள்ளவர்கள்,வயிறு பெரிதாக இருப்பவர்கள்,மது அருந்துபவர்கள்
பரிசோதனைகள்:
அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், ஃபைப்ரோ ஸ்கேன் மூலம் கல்லீரல் நிலை மதிப்பிடலாம்.
ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
கல்லீரல் ஆரோக்கியம் பராமரிப்பதற்கு உணவுப் பழக்கவழக்கம் முக்கியம்
40 வயதை நெருங்கும் போது கூட எடை அதிகரிக்காமல் கவனிக்க வேண்டும்.
மது அருந்தாதவர்களுக்கும் கூட கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படக்கூடும்.
நோய் ஆரம்ப நிலையில் இருப்பது அறியப்படாமல் விட்டால், Fibrosis, Cirrhosis போன்ற தீவிர நிலைகளுக்கு வழிவகுக்கும். அதனால் பரிசோதனை, சரியான உணவு பழக்கம் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை மிகவும் அவசியம்.
கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்புகள் உலகம் முழுவதும் ஆயிரத்தில் 47 பேருக்கு ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (Non-Alcoholic Fatty Liver Disease – NAFLD) ஏற்பட்டு வருகிறது என்று நஷனல் சென்டர் ஃபோர் பயோடெக்னாலஜி தகவல்கள் (NCBI) கூறுகிறது. இது பெண்களை விட ஆண்களிடையே அதிகம் காணப்படுகிறது.NAFLD என்பது என்னமுன்னர் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் என்று அழைக்கப்பட்ட கல்லீரல் நோய் (MASLD) உடல் பருமன்,நீரிழிவு மற்றும் இதய நோய்களுடன் தொடர்புடைய, கல்லீரலில் தேவையற்ற கொழுப்பு சேரும் நிலையாகும். இது கல்லீரல் அழற்சி (MASH), வடுக்கள், மற்றும் சில நேரங்களில் கல்லீரல் புற்றுநோய் அல்லது கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கக்கூடும்.கல்லீரலின் முக்கியப் பணிகளாவன,கல்லீரல் உடல் உற்பத்தி செய்யும் 500-க்கும் மேற்பட்ட வேலையை நிறைவேற்றுகிறது. உணவு ஜீரணத்திலிருந்து பொருட்களை எடுக்கும் முதல் அடி முதல் உடல் பராமரிப்பு வரை கல்லீரல் பாதிப்பால் நிவாரணம் தேவைப்படுகிறது.NAFLD வருவதற்கான காரணங்கள்,உடல் பருமன், உயர் BMI, வயிறு கொழுப்பு,அதிக கலோரி உணவு, துரித உணவு, குறைந்த உடலறிஞ்சல்,புகைப்பிடித்தல், தூக்கமின்மை"இப்போது இது ‘வளர்சிதை மாற்ற நோய்க்குழுமம்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் தாக்கம் கல்லீரலுக்கு மட்டுமல்ல, இதயத்திற்கு வரை பரவும். நீரிழிவு நோயுடன் கல்லீரல் கொழுப்பு இருந்தால் இதய நோய்கள் அதிகரிக்கும்.அறிகுறிகள்:பெரும்பாலான நோயாளர்களுக்கு ஆரம்ப நிலை அறிகுறிகள் இல்லை,சோர்வு, உற்சாகமின்மை போன்றவை தோன்றினாலும், இதை மட்டும் கொண்டு NAFLD கண்டறிய முடியாது,அதனால் ஆபத்துள்ளவர்கள் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்.யாருக்கு அதிக ஆபத்து10 வருடங்களுக்கு மேலாக நீரிழிவு நோய் கொண்டவர்கள்,BMI 23–க்கு மேல் உள்ளவர்கள்,வயிறு பெரிதாக இருப்பவர்கள்,மது அருந்துபவர்கள்பரிசோதனைகள்:அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், ஃபைப்ரோ ஸ்கேன் மூலம் கல்லீரல் நிலை மதிப்பிடலாம்.ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.கல்லீரல் ஆரோக்கியம் பராமரிப்பதற்கு உணவுப் பழக்கவழக்கம் முக்கியம் 40 வயதை நெருங்கும் போது கூட எடை அதிகரிக்காமல் கவனிக்க வேண்டும்.மது அருந்தாதவர்களுக்கும் கூட கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படக்கூடும். நோய் ஆரம்ப நிலையில் இருப்பது அறியப்படாமல் விட்டால், Fibrosis, Cirrhosis போன்ற தீவிர நிலைகளுக்கு வழிவகுக்கும். அதனால் பரிசோதனை, சரியான உணவு பழக்கம் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை மிகவும் அவசியம்.