• Jul 01 2024

கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட கொடுப்பனவுகள்- கனடா விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Tamil nila / Jun 29th 2024, 6:56 pm
image

Advertisement

கனடாவில் கொரோனா பெருந் தொற்று ஏற்பட்ட காலத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட நலன்புரித் திட்டக் கொடுப்பனவுகளை மீள வசூலிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கனடிய வருமான முகவர் நிறுவனம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கொரோனா தொற்றால் பொருளாதார ரீதியாக பாதிப்புகளை எதிர்நோக்கியவர்களுக்கு கனடிய அரசாங்கம் கொடுப்பனவு தொகைகளை வழங்கியிருந்தது.

சுமார் 9 மில்லியன் டொலர்கள் தனிப்பட்ட நபர்களுக்கு நலன்புரி கொடுப்பனவுக்கு கூடுதலாக செலுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு கூடுதல் தொகை பணம் பெற்றுக் கொண்டவர்களிடமிருந்து அதனை மீண்டு் அறவீடு செய்யும் நடவடிக்கை சட்ட ரீதியாக முன்னெடுக்கப்படுமென கனடிய வருமான முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.

கூடுதலாக பணம் பெற்றுக் கொண்டவர்களின் சம்பளங்கள் அல்லது வங்கிக் கணக்குகள் ஊடாக மேலதிகமாக செலுத்தப்பட்ட தொகைகள் அறவீடு செய்யப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட கொடுப்பனவுகள்- கனடா விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு கனடாவில் கொரோனா பெருந் தொற்று ஏற்பட்ட காலத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட நலன்புரித் திட்டக் கொடுப்பனவுகளை மீள வசூலிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.கனடிய வருமான முகவர் நிறுவனம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.கொரோனா தொற்றால் பொருளாதார ரீதியாக பாதிப்புகளை எதிர்நோக்கியவர்களுக்கு கனடிய அரசாங்கம் கொடுப்பனவு தொகைகளை வழங்கியிருந்தது.சுமார் 9 மில்லியன் டொலர்கள் தனிப்பட்ட நபர்களுக்கு நலன்புரி கொடுப்பனவுக்கு கூடுதலாக செலுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இவ்வாறு கூடுதல் தொகை பணம் பெற்றுக் கொண்டவர்களிடமிருந்து அதனை மீண்டு் அறவீடு செய்யும் நடவடிக்கை சட்ட ரீதியாக முன்னெடுக்கப்படுமென கனடிய வருமான முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.கூடுதலாக பணம் பெற்றுக் கொண்டவர்களின் சம்பளங்கள் அல்லது வங்கிக் கணக்குகள் ஊடாக மேலதிகமாக செலுத்தப்பட்ட தொகைகள் அறவீடு செய்யப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement