• Nov 06 2024

மாற்றுத்திறனாளியின் உயிரை குடித்த கனடா வீசா..! - யாழில் துயரச் சம்பவம்

Chithra / Mar 13th 2024, 8:28 am
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் கனடாவுக்கு விசா கிடைத்தும் அங்கு செல்ல விரும்பாத இளைஞன் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த கால் நடக்க முடியாத மாற்றுத் திறனாளியான 32 வயதுடைய ஒருவரே நேற்றையதினம் இவ்வாறு விபரீத முடிவை எடுத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபரின் சகோதரி ஒருவர் கனடாவில் வசித்து வருகிறார். 

இந்நிலையில் இறந்த நபருக்கும், அவரது தாயாருக்கும் கனடாவுக்கான சுற்றுலா விசா கிடைத்துள்ளது. 

ஆனால் குறித்த நபருக்கு கனடா செல்வதில் விருப்பம் இருக்கவில்லை.

இந்நிலையில் அவர் தனது சக்கர நாற்காலியை கிணற்றுக்கு அருகே நிறுத்திவிட்டு கிணற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார் என தெரியவருகின்றது.

இதையடுத்து  அவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். 

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளியின் உயிரை குடித்த கனடா வீசா. - யாழில் துயரச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் கனடாவுக்கு விசா கிடைத்தும் அங்கு செல்ல விரும்பாத இளைஞன் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த கால் நடக்க முடியாத மாற்றுத் திறனாளியான 32 வயதுடைய ஒருவரே நேற்றையதினம் இவ்வாறு விபரீத முடிவை எடுத்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபரின் சகோதரி ஒருவர் கனடாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் இறந்த நபருக்கும், அவரது தாயாருக்கும் கனடாவுக்கான சுற்றுலா விசா கிடைத்துள்ளது. ஆனால் குறித்த நபருக்கு கனடா செல்வதில் விருப்பம் இருக்கவில்லை.இந்நிலையில் அவர் தனது சக்கர நாற்காலியை கிணற்றுக்கு அருகே நிறுத்திவிட்டு கிணற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார் என தெரியவருகின்றது.இதையடுத்து  அவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement