• May 12 2024

பொதுச்சேவை சுயாதீன ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட முடியாதா?- யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவர் விக்னேஸ் கேள்வி!!

Tamil nila / Feb 29th 2024, 7:10 am
image

Advertisement

பொதுச்சேவை ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட முடியாதா? யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவர் விக்னேஸ் கேள்வி  எழுப்பியுள்ளார். 

இன்று (28) யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் சந்திப்பில் அதன் தலைவர் குலரட்ணம் விக்னேஸ் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

இன்று நாம் இலங்கை ஆசிரிய சங்க உபதலைவர் தீபன் திலீசன் மற்றும் எமது சங்க உபதலைவர் ரஜீவன் ஆகியோருடன் இணைந்து கல்லூரியின் அதிபர் நியமனம் தொடர்பாக அதனால் எழுந்துள்ள குழப்பநிலை தொடர்பாக சில தெளிவுபடுத்தல்களை வழங்கலாம் என்று இந்த பத்திரியையாளர்  சந்திப்பினை ஏற்பாடு செய்துள்ளோம். 

யாழ். மாவட்டத்தில் வடக்கில் நிறுவனமயப்படுத்தப்பட்ட கல்விச் செயற்பாட்டை அறிமுகப் படுத்திய கல்லூரி எமது கல்லூரி, பல சாதணைகளைப் படைத்துள்ளது. பல சாதணையாளர்களை உருவாக்கியுள்ள கல்லூரி ஆனால் இன்று பல்வேறு குளறுபடி, அதிகார துஸ்பிரயோகம் காரணமாக மாணவர்கள், பெற்றோர்கள், 90 சத வீகிதமான பழைய மாணவர்கள் ஆகியோர் குழப்பத்திற்கு ஆளாகி நிற்கின்ற நிலையினை இன்றைய இந்த அதிபர் நியமனம் சார்ந்த இழுபறிநிலை இட்டு நிற்கின்றது.

மத்திய கல்லூரிக்கென்று அதிபர் ஒருவரை முறையான விண்ணப்பம், நேர்கானல் என்பவற்றினூடாக பொதுச்சேவை ஆணைக்குழு தெரிவு செய்து கடந்த 09 ஆம் திகதி நியமிக்கப்பட்டதாக அறியக்கிடைக்கின்றது. 

இதற்கு முன்னர் பாடசாலையில் அதிபராகக் கடைமையாற்றிய எழில்வேந்தனுக்கு பின்னர் பதில் அதிபராக இந்திரகுமார் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்தார். புதிய அதிபர் நியமிக்கப்பட்டு 3வாரங்கள் கடந்த நிலையிலும் அதற்கான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டு பதில் அதிபரிடம் பெறுப்புக்களை பெற காத்திருக்கின்ற நிலையிலும் அவரிடம் தற்காலிக பதில் அதிபர் பொறுப்புக்களை கையளிக்கவில்லை என்றே அறியக்கிடைக்கின்றது. இந்த விடயம் தொடர்பாக உரிய தரப்பு சார்ந்தோ, கல்வி அமைச்சுச் சார்ந்தோ அல்லது கல்விச் சேவை சார்ந்தோ எவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

 பாடசாலை வளாகத்திற்குள் இந்த இரண்டு அதிபர்களையும் மோதவிட்டு குழப்பம் ஏற்படுத்துபவர்கள் யார்? 

இதற்கான காரணம் என்ன? என்று என்னத் தோன்றுகின்றது.

நேற்று பாடசாலைக்குள் என்ன நடந்தது என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். அங்கே புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர் தொடர்பாக சில கேல்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அந்த விடயத்தில் சில கேல்வி எமக்குள் எழுகின்றன. சுயாதின ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட அங்கு இடம்கொடுக்கப்படவில்லையைா?   கல்வி அமைச்சுக்குள் கடந்த காலத்தில் எழுந்த சில குழப்பங்கள் காரணமாக பொதுச் சேவை ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. அந்த ஆணைகுழுவினால் நியமிக்கப்பட்ட அதிபர் பதவியை ஏற்பதில் இருக்கின்ற தாமதம் கல்விச்சேவை சார்தோரால், மகாண மட்டத்தினால் ஏன் இன்னும் இது சார்ந்த நடவடிக்கை எடுக்கவில்லை? என கேட்கத் தோன்றுகின்றது. இதனை தெளிவு படுத்தவே இந்த பந்திரியைாளர் சந்திப்பினை நாம் ஏற்பாடு செய்தோம் -என்று குறிப்பிட்டார்.

பொதுச்சேவை சுயாதீன ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட முடியாதா- யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவர் விக்னேஸ் கேள்வி பொதுச்சேவை ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட முடியாதா யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவர் விக்னேஸ் கேள்வி  எழுப்பியுள்ளார். இன்று (28) யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் சந்திப்பில் அதன் தலைவர் குலரட்ணம் விக்னேஸ் தெரிவித்தார்.அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்இன்று நாம் இலங்கை ஆசிரிய சங்க உபதலைவர் தீபன் திலீசன் மற்றும் எமது சங்க உபதலைவர் ரஜீவன் ஆகியோருடன் இணைந்து கல்லூரியின் அதிபர் நியமனம் தொடர்பாக அதனால் எழுந்துள்ள குழப்பநிலை தொடர்பாக சில தெளிவுபடுத்தல்களை வழங்கலாம் என்று இந்த பத்திரியையாளர்  சந்திப்பினை ஏற்பாடு செய்துள்ளோம். யாழ். மாவட்டத்தில் வடக்கில் நிறுவனமயப்படுத்தப்பட்ட கல்விச் செயற்பாட்டை அறிமுகப் படுத்திய கல்லூரி எமது கல்லூரி, பல சாதணைகளைப் படைத்துள்ளது. பல சாதணையாளர்களை உருவாக்கியுள்ள கல்லூரி ஆனால் இன்று பல்வேறு குளறுபடி, அதிகார துஸ்பிரயோகம் காரணமாக மாணவர்கள், பெற்றோர்கள், 90 சத வீகிதமான பழைய மாணவர்கள் ஆகியோர் குழப்பத்திற்கு ஆளாகி நிற்கின்ற நிலையினை இன்றைய இந்த அதிபர் நியமனம் சார்ந்த இழுபறிநிலை இட்டு நிற்கின்றது.மத்திய கல்லூரிக்கென்று அதிபர் ஒருவரை முறையான விண்ணப்பம், நேர்கானல் என்பவற்றினூடாக பொதுச்சேவை ஆணைக்குழு தெரிவு செய்து கடந்த 09 ஆம் திகதி நியமிக்கப்பட்டதாக அறியக்கிடைக்கின்றது. இதற்கு முன்னர் பாடசாலையில் அதிபராகக் கடைமையாற்றிய எழில்வேந்தனுக்கு பின்னர் பதில் அதிபராக இந்திரகுமார் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்தார். புதிய அதிபர் நியமிக்கப்பட்டு 3வாரங்கள் கடந்த நிலையிலும் அதற்கான அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டு பதில் அதிபரிடம் பெறுப்புக்களை பெற காத்திருக்கின்ற நிலையிலும் அவரிடம் தற்காலிக பதில் அதிபர் பொறுப்புக்களை கையளிக்கவில்லை என்றே அறியக்கிடைக்கின்றது. இந்த விடயம் தொடர்பாக உரிய தரப்பு சார்ந்தோ, கல்வி அமைச்சுச் சார்ந்தோ அல்லது கல்விச் சேவை சார்ந்தோ எவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  பாடசாலை வளாகத்திற்குள் இந்த இரண்டு அதிபர்களையும் மோதவிட்டு குழப்பம் ஏற்படுத்துபவர்கள் யார் இதற்கான காரணம் என்ன என்று என்னத் தோன்றுகின்றது.நேற்று பாடசாலைக்குள் என்ன நடந்தது என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். அங்கே புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர் தொடர்பாக சில கேல்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அந்த விடயத்தில் சில கேல்வி எமக்குள் எழுகின்றன. சுயாதின ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட அங்கு இடம்கொடுக்கப்படவில்லையைா   கல்வி அமைச்சுக்குள் கடந்த காலத்தில் எழுந்த சில குழப்பங்கள் காரணமாக பொதுச் சேவை ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. அந்த ஆணைகுழுவினால் நியமிக்கப்பட்ட அதிபர் பதவியை ஏற்பதில் இருக்கின்ற தாமதம் கல்விச்சேவை சார்தோரால், மகாண மட்டத்தினால் ஏன் இன்னும் இது சார்ந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்கத் தோன்றுகின்றது. இதனை தெளிவு படுத்தவே இந்த பந்திரியைாளர் சந்திப்பினை நாம் ஏற்பாடு செய்தோம் -என்று குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement