• May 31 2026

மின் கம்பத்தில் மோதி சிதறிய கார் - சிறுவன் உட்பட பலர் காயம்

Chithra / May 30th 2026, 8:42 am
image

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் பெரியகல்லாறு பகுதியில் நேற்று இடம்பெற்ற பயங்கர கார் விபத்தில் சிறுவன் ஒருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.


களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இப்பகுதியில், அதிவேகமாகப் பயணித்த கார் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த மின் கம்பம் மற்றும் மதில் ஒன்றுடனும் பலமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.


விபத்து நடந்த உடனே அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு, காரில் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த நான்கு பேரையும் மீட்டு அவசர சிகிச்சைக்காக உடனடியாக கல்லாறு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மின் கம்பத்தில் மோதி சிதறிய கார் - சிறுவன் உட்பட பலர் காயம் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் பெரியகல்லாறு பகுதியில் நேற்று இடம்பெற்ற பயங்கர கார் விபத்தில் சிறுவன் ஒருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இப்பகுதியில், அதிவேகமாகப் பயணித்த கார் ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த மின் கம்பம் மற்றும் மதில் ஒன்றுடனும் பலமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.விபத்து நடந்த உடனே அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு, காரில் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த நான்கு பேரையும் மீட்டு அவசர சிகிச்சைக்காக உடனடியாக கல்லாறு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement