• Apr 16 2026

வவுனியாவில் காட்டு யானைகள் அட்டகாசம்; தென்னை, வாழை மரங்கள் சேதம்

Chithra / Apr 5th 2026, 12:52 pm
image


வவுனியா - மரக்காரம்பளை கிராமத்தில் நேற்றிரவு தோட்ட நிலத்திற்குள் உட்புகுந்த காட்டு யானைகள் காய்க்கும் நிலையில் இருந்த பெருமளவு தென்னை, வாழை மரங்களை சேதமாக்கி அட்டகாசம் செய்துள்ளன.  


குறித்த கிராமத்தினுள் உட்புகுந்த யானைகள் காய்க்கும் நிலையில் இருந்து பதினெட்டுக்கும் மேற்பட்ட தென்னை பயிர்களையும், ஐம்பதுக்கும் மேற்பட்ட வாழைமரங்களையும் நாசமாக்கிச் சென்றுள்ளன. 


நகரின் எல்லைக் கிராமமான குறித்த கிராமத்தில் யானைகளின் தொல்லை காணப்படாத நிலையிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமையால் கிராம மக்கள் பெரும் அச்சத்தின் மத்தியில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் தமது கிராமத்தினை சூழ யானை  வேலியை அமைத்து தருமாறு கிராமமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வவுனியாவில் காட்டு யானைகள் அட்டகாசம்; தென்னை, வாழை மரங்கள் சேதம் வவுனியா - மரக்காரம்பளை கிராமத்தில் நேற்றிரவு தோட்ட நிலத்திற்குள் உட்புகுந்த காட்டு யானைகள் காய்க்கும் நிலையில் இருந்த பெருமளவு தென்னை, வாழை மரங்களை சேதமாக்கி அட்டகாசம் செய்துள்ளன.  குறித்த கிராமத்தினுள் உட்புகுந்த யானைகள் காய்க்கும் நிலையில் இருந்து பதினெட்டுக்கும் மேற்பட்ட தென்னை பயிர்களையும், ஐம்பதுக்கும் மேற்பட்ட வாழைமரங்களையும் நாசமாக்கிச் சென்றுள்ளன. நகரின் எல்லைக் கிராமமான குறித்த கிராமத்தில் யானைகளின் தொல்லை காணப்படாத நிலையிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமையால் கிராம மக்கள் பெரும் அச்சத்தின் மத்தியில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் தமது கிராமத்தினை சூழ யானை  வேலியை அமைத்து தருமாறு கிராமமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement