• Jul 22 2026

மண்டையோடு இன்றி என்புக்கூடுகள்; இரு சிறுவர்கள் அருகருகே புதைப்பு

Chithra / Jul 21st 2026, 7:01 pm
image


செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளின் 39ஆவது நாள் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், அருகருகே காணப்பட்ட இரு சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட மேலும் 13 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய அகழ்வில் சில மனித எலும்புகள் குவியலாகவும் கண்டறியப்பட்டுள்ளன.


மேலும், சில எலும்புக்கூடுகள் மண்டையோடுகள் இன்றி காணப்பட்டதாகவும், குவியலாக கண்டறியப்பட்ட எலும்புகளுக்குள் மண்டையோடுகளும் இருப்பதால், அவை தொடர்பான உறுதியான தகவல்களை ஆய்வுகளின் பின்னரே வெளியிட முடியும் என சட்டத்தரணி ஞா. ரனித்தா தெரிவித்துள்ளார்.


அதேவேளை, முன்னதாக அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில் மூன்று சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட நான்கு எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.


இதனையடுத்து, செம்மணி மனித புதைகுழியின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை மொத்தம் 93 நாட்கள் அகழாய்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 467 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 444 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.


மண்டையோடு இன்றி என்புக்கூடுகள்; இரு சிறுவர்கள் அருகருகே புதைப்பு செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளின் 39ஆவது நாள் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், அருகருகே காணப்பட்ட இரு சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட மேலும் 13 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய அகழ்வில் சில மனித எலும்புகள் குவியலாகவும் கண்டறியப்பட்டுள்ளன.மேலும், சில எலும்புக்கூடுகள் மண்டையோடுகள் இன்றி காணப்பட்டதாகவும், குவியலாக கண்டறியப்பட்ட எலும்புகளுக்குள் மண்டையோடுகளும் இருப்பதால், அவை தொடர்பான உறுதியான தகவல்களை ஆய்வுகளின் பின்னரே வெளியிட முடியும் என சட்டத்தரணி ஞா. ரனித்தா தெரிவித்துள்ளார்.அதேவேளை, முன்னதாக அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில் மூன்று சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட நான்கு எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.இதனையடுத்து, செம்மணி மனித புதைகுழியின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை மொத்தம் 93 நாட்கள் அகழாய்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 467 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 444 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement