• Apr 29 2026

'ட்ரயல் அட் பார்' நீதிமன்றில் ரணிலுக்கு எதிரான வழக்கு குற்றச்சாட்டுகள் மார்ச்சில் தாக்கல்

dorin / Jan 28th 2026, 8:40 pm
image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிவடையும் என்றும், மார்ச் மாதத்துக்குள் முறையான குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்படும் என்றும் சட்டமா அதிபர் திணைக்களம் இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளது.

வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் மார்ச் மாதம் மேல்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் தரப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்தச்  சமர்ப்பணத்தை வழங்கினார்.

முதல் சந்தேகநபரான ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன எனவும், இரண்டாவது சந்தேகநபரான சமன் ஏகநாயக்க என்றும் அழைக்கப்படும் சோமிசார பண்டார ஏகநாயக்க மீதான விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.

மீதமுள்ள விசாரணைகள் முடிவடைந்ததும், திட்டமிட்டபடி மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

பிணையில் விடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நீதிமன்றத்தில் பிரசன்னமானார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கிலாந்துக்கு அதிகாரபூர்வமற்ற விஜயம் மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன எனப் புலனாய்வாளர்கள் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தனர்.

இந்தக் கருத்தை நீதிமன்றம் கவனத்தில் கொள்வதாக கொழும்பு கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தது. இந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மேல் நீதிமன்றம் ஒரு நீதிபதி ஆயத்தைக் கொண்டதாக அமர்வது வழக்கம். ஆயினும் விசேட வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக மூன்று நீதிபதிகளைக் கொண்ட 'ட்ரயல் அட் பார்' மேற்கொள்ளப்படுவது உண்டு.

கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடூர கொலை வழக்கு, மிருசுவில் படுகொலை வழக்கு, உடத்தல்வின்ன படுகொலை வழக்கு போன்றவை 'ட்ரயல் அட் பார்' மன்றில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'ட்ரயல் அட் பார்' நீதிமன்றில் ரணிலுக்கு எதிரான வழக்கு குற்றச்சாட்டுகள் மார்ச்சில் தாக்கல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிவடையும் என்றும், மார்ச் மாதத்துக்குள் முறையான குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்படும் என்றும் சட்டமா அதிபர் திணைக்களம் இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளது.வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் மார்ச் மாதம் மேல்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் தரப்பு தெரிவித்துள்ளது.கொழும்பு கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்தச்  சமர்ப்பணத்தை வழங்கினார்.முதல் சந்தேகநபரான ரணில் விக்கிரமசிங்க தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன எனவும், இரண்டாவது சந்தேகநபரான சமன் ஏகநாயக்க என்றும் அழைக்கப்படும் சோமிசார பண்டார ஏகநாயக்க மீதான விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.மீதமுள்ள விசாரணைகள் முடிவடைந்ததும், திட்டமிட்டபடி மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.பிணையில் விடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நீதிமன்றத்தில் பிரசன்னமானார்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கிலாந்துக்கு அதிகாரபூர்வமற்ற விஜயம் மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன எனப் புலனாய்வாளர்கள் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தனர்.இந்தக் கருத்தை நீதிமன்றம் கவனத்தில் கொள்வதாக கொழும்பு கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார தெரிவித்தார்.ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தது. இந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.மேல் நீதிமன்றம் ஒரு நீதிபதி ஆயத்தைக் கொண்டதாக அமர்வது வழக்கம். ஆயினும் விசேட வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக மூன்று நீதிபதிகளைக் கொண்ட 'ட்ரயல் அட் பார்' மேற்கொள்ளப்படுவது உண்டு.கிருஷாந்தி குமாரசாமி பாலியல் வன்கொடூர கொலை வழக்கு, மிருசுவில் படுகொலை வழக்கு, உடத்தல்வின்ன படுகொலை வழக்கு போன்றவை 'ட்ரயல் அட் பார்' மன்றில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement