• Jun 28 2024

காசை காலால் மிதித்த தொழிலதிபர் மீது வழக்கு - நீதிமன்றில் முற்படுத்த முயற்சி!

Tamil nila / Jun 22nd 2024, 11:05 pm
image

Advertisement

யாழ். நகர்ப்பகுதியில் பலரும் பார்த்திருக்க காசை காலால் மிதித்துவிட்டு வெளிநாடு சென்றிருந்த யாழைச் சேர்ந்த  தொழிலதிபர்,  நாடு திரும்பியிருந்த நிலையில் இன்று  யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர் மீது எதிர்வரும் திங்கட்கிழமை  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவுள்ளதாக தெரியவருகிறது. 

குறித்த தொழிலதிபர்  தனது மகளின் பிறந்த தினத்தை  முன்னிட்டு வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்களுக்கு  அண்மையில் உதவிகள்  வழங்குவதாக அறிவித்திருந்தார் 

அன்றைய தினம் இராணுவம் மற்றும் பொலிசார்  பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டும் சனக்கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை குறித்த சம்பவம் பற்றி கேள்வி எழுப்பியிருந்த ஊடகத்திடம்   இந்த நிகழ்வு குறித்து விளக்கமளித்துக்கொண்டிருந்த தொழிலதிபர், ஜனாதிபதி என்றாலும் என்னை தேடித்தான் வரவேண்டும்- யாழ்ப்பாணத்தை என்னிடம் தாருங்கள், எதிர்வரும் 24 ஆம் திகதி என்னை சந்திக்க வருகிறார். நானாக எங்கும் போகமாட்டேன் என்னை அழைத்தால் தான் போவேன்- என்று தனது கருத்தை பதிவு செய்துகொண்டிருந்தார். அவர் நினைத்த அவளவு மக்களுக்கு கொடுக்க முடியவில்லை  இதனால் கவலையாக உள்ளது என்றார் பின்னர் திடீரென  தனது சட்டைப்பையில் இருந்து லட்சக்கணக்கான காசை எடுத்து நிலத்தில் போட்டு தன் காலால் மதித்தபடி நின்றார். இதை பார்த்த அனைவரும் சற்று நேரம் அதிர்ச்சியடைந்தனர். 

குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் அவரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்புக்கள் வலுத்தன.  

அநாகரிகமான செயற்பாடு என்றும் நாணயத்தை அவமதிப்பு செய்ததற்கும் தண்டிக்கப்படவேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துவந்தனர். 

குறித்த நபர் சம்பவம் நடைபெற்று இரு நாட்கள் கழித்து வெளிநாட்டுக்கு பயணமானார். சம்பவம் நடந்து இரண்டாவது நாள் , தான் குறித்த பணியில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுகிறேன் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுவிட்டுச் விட்டுச் சென்றார். 

குறித்த காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தும் உடனடியாக குறித்த நபர் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சட்டம் தன் கடமையை செய்யாமல் இருப்பது ஏன் எனவும் பலர் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். 

இந்தநிலையில் குறித்த  விடயம் தொடர்பில், உயர்மட்ட அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த நபர் மீது யாழ்ப்பாண பொலிசார் நடவடிக்கையை தற்போது  ஆரம்பித்துள்ளனர். அவர் இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அவர் எதிர்வரும் திங்கட்கிழமை  மீள யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் அன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் எனத்தெரியவருகிறது.


காசை காலால் மிதித்த தொழிலதிபர் மீது வழக்கு - நீதிமன்றில் முற்படுத்த முயற்சி யாழ். நகர்ப்பகுதியில் பலரும் பார்த்திருக்க காசை காலால் மிதித்துவிட்டு வெளிநாடு சென்றிருந்த யாழைச் சேர்ந்த  தொழிலதிபர்,  நாடு திரும்பியிருந்த நிலையில் இன்று  யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர் மீது எதிர்வரும் திங்கட்கிழமை  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவுள்ளதாக தெரியவருகிறது. குறித்த தொழிலதிபர்  தனது மகளின் பிறந்த தினத்தை  முன்னிட்டு வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்களுக்கு  அண்மையில் உதவிகள்  வழங்குவதாக அறிவித்திருந்தார் அன்றைய தினம் இராணுவம் மற்றும் பொலிசார்  பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டும் சனக்கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை குறித்த சம்பவம் பற்றி கேள்வி எழுப்பியிருந்த ஊடகத்திடம்   இந்த நிகழ்வு குறித்து விளக்கமளித்துக்கொண்டிருந்த தொழிலதிபர், ஜனாதிபதி என்றாலும் என்னை தேடித்தான் வரவேண்டும்- யாழ்ப்பாணத்தை என்னிடம் தாருங்கள், எதிர்வரும் 24 ஆம் திகதி என்னை சந்திக்க வருகிறார். நானாக எங்கும் போகமாட்டேன் என்னை அழைத்தால் தான் போவேன்- என்று தனது கருத்தை பதிவு செய்துகொண்டிருந்தார். அவர் நினைத்த அவளவு மக்களுக்கு கொடுக்க முடியவில்லை  இதனால் கவலையாக உள்ளது என்றார் பின்னர் திடீரென  தனது சட்டைப்பையில் இருந்து லட்சக்கணக்கான காசை எடுத்து நிலத்தில் போட்டு தன் காலால் மதித்தபடி நின்றார். இதை பார்த்த அனைவரும் சற்று நேரம் அதிர்ச்சியடைந்தனர். குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் அவரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்புக்கள் வலுத்தன.  அநாகரிகமான செயற்பாடு என்றும் நாணயத்தை அவமதிப்பு செய்ததற்கும் தண்டிக்கப்படவேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துவந்தனர். குறித்த நபர் சம்பவம் நடைபெற்று இரு நாட்கள் கழித்து வெளிநாட்டுக்கு பயணமானார். சம்பவம் நடந்து இரண்டாவது நாள் , தான் குறித்த பணியில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுகிறேன் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுவிட்டுச் விட்டுச் சென்றார். குறித்த காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தும் உடனடியாக குறித்த நபர் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சட்டம் தன் கடமையை செய்யாமல் இருப்பது ஏன் எனவும் பலர் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இந்தநிலையில் குறித்த  விடயம் தொடர்பில், உயர்மட்ட அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த நபர் மீது யாழ்ப்பாண பொலிசார் நடவடிக்கையை தற்போது  ஆரம்பித்துள்ளனர். அவர் இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.அவர் எதிர்வரும் திங்கட்கிழமை  மீள யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் அன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் எனத்தெரியவருகிறது.

Advertisement

Advertisement

Advertisement