• Jun 02 2026

காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் சேவை; பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

Chithra / Jun 1st 2026, 12:37 pm
image

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சுபம் நிறுவனத்தின் சிவகங்கை கப்பலானது எதிர்வரும் 03.06.2026 புதன்கிழமை தொடக்கம் மீண்டும் சேவையில் ஈடுபடும் என அந்த கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.


கடலில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த கப்பலானது பழுதடைந்த நிலையில் போக்குவரத்து சேவையானது இடைநிறுத்தப்பட்டது.


இந்நிலையில் குறித்த கப்பல் போக்குவரத்தானது எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாகின்ற நிலையில், கப்பல் போக்குவரத்து வழமை போல் செவ்வாய் தவிர்ந்த ஏனைய ஆறு நாட்களும் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.


எனவே www.sailsubham.com என்ற இணைத்தளத்திற்குள் பிரவேசிப்பதனூடாகவோ அல்லது 0212224647, 0117642117 என்ற இலக்கங்களுக்கு அழைப்பு மேற்கொள்வதன் மூலமாகவோ பயணச்சீட்டுகளை பதிவுசெய்துகொள்ள முடியும் என மேலும் தெரிவிக்கப்படுகிறது. 


காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் சேவை; பயணிகளுக்கு விசேட அறிவிப்பு காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சுபம் நிறுவனத்தின் சிவகங்கை கப்பலானது எதிர்வரும் 03.06.2026 புதன்கிழமை தொடக்கம் மீண்டும் சேவையில் ஈடுபடும் என அந்த கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.கடலில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குறித்த கப்பலானது பழுதடைந்த நிலையில் போக்குவரத்து சேவையானது இடைநிறுத்தப்பட்டது.இந்நிலையில் குறித்த கப்பல் போக்குவரத்தானது எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாகின்ற நிலையில், கப்பல் போக்குவரத்து வழமை போல் செவ்வாய் தவிர்ந்த ஏனைய ஆறு நாட்களும் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.எனவே www.sailsubham.com என்ற இணைத்தளத்திற்குள் பிரவேசிப்பதனூடாகவோ அல்லது 0212224647, 0117642117 என்ற இலக்கங்களுக்கு அழைப்பு மேற்கொள்வதன் மூலமாகவோ பயணச்சீட்டுகளை பதிவுசெய்துகொள்ள முடியும் என மேலும் தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement