2024ஆம் ஆண்டில் 3 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை எதிர்ப்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் நடாத்தப்பட்ட "2024 மற்றும் நாட்டின் பொருளாதாரம்" என்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், பணவீக்கத்தை 5 சதவீதமாக பேண எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
வரி செலுத்துவதைத் தவிர்க்க முயற்சிப்பவர்கள் குறித்து வரி செலுத்துவோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த முறையில் வரி தளத்தை விரிவுபடுத்துவது தனிநபர் வரிச்சுமையை குறைக்க மட்டுமே உதவும்.
2023 ஆம் ஆண்டை விட நேர்மறையான குறிப்பில் இலங்கை 2024 இல் அடியெடுத்து வைத்துள்ளது என்றும், இந்த ஆண்டு நனவாகும் சிறந்த வாய்ப்புகள் நாட்டில் இருப்பதாகவும் கூறினார்.
இதேபோன்ற பொருளாதார நெருக்கடிகளை சந்தித்த வேறு பல நாடுகளையும் விட இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை மிக விரைவாக மீட்டெடுத்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
வரி செலுத்துவதைத் தவிர்க்க முயற்சிப்பவர்களுக்கு மத்திய வங்கி ஆளுநரின் எச்சரிக்கை. 2024ஆம் ஆண்டில் 3 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை எதிர்ப்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் நடாத்தப்பட்ட "2024 மற்றும் நாட்டின் பொருளாதாரம்" என்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.மேலும், பணவீக்கத்தை 5 சதவீதமாக பேண எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.வரி செலுத்துவதைத் தவிர்க்க முயற்சிப்பவர்கள் குறித்து வரி செலுத்துவோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.இந்த முறையில் வரி தளத்தை விரிவுபடுத்துவது தனிநபர் வரிச்சுமையை குறைக்க மட்டுமே உதவும். 2023 ஆம் ஆண்டை விட நேர்மறையான குறிப்பில் இலங்கை 2024 இல் அடியெடுத்து வைத்துள்ளது என்றும், இந்த ஆண்டு நனவாகும் சிறந்த வாய்ப்புகள் நாட்டில் இருப்பதாகவும் கூறினார்.இதேபோன்ற பொருளாதார நெருக்கடிகளை சந்தித்த வேறு பல நாடுகளையும் விட இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை மிக விரைவாக மீட்டெடுத்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.