• Jul 03 2025

மாணவிகளுக்கான சுகாதார நாப்கின் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

Chithra / Jul 3rd 2025, 1:45 pm
image

2025ஆம் ஆண்டில், பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார நாப்கின்  வழங்கும் திட்டம், தெரிவு செய்யப்பட்ட வர்த்தக நிறுவனங்களினூடாக மாத்திரமே முன்னெடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

அதன்படி, இலங்கை தர நிர்ணய நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட SLS தரச் சான்றிதழைப் பெற்ற, 4 வர்த்தக நிறுவனங்களிலிருந்து மட்டுமே இதனைப் பெறமுடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது. 

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பாடசாலைகளுக்குச் சென்று மாணவிகளுக்குப் பாதுகாப்பு அணையாடைகளை வழங்குமென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவிகளுக்கான சுகாதார நாப்கின் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல் 2025ஆம் ஆண்டில், பாடசாலை மாணவிகளுக்கான சுகாதார நாப்கின்  வழங்கும் திட்டம், தெரிவு செய்யப்பட்ட வர்த்தக நிறுவனங்களினூடாக மாத்திரமே முன்னெடுக்கப்படும் எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கை தர நிர்ணய நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட SLS தரச் சான்றிதழைப் பெற்ற, 4 வர்த்தக நிறுவனங்களிலிருந்து மட்டுமே இதனைப் பெறமுடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பாடசாலைகளுக்குச் சென்று மாணவிகளுக்குப் பாதுகாப்பு அணையாடைகளை வழங்குமென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement