ஜனாதிபதி வேட்பாளராக ஒருவரை தெரிவு செய்தற்கு முன், அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் எவ்வாறான வேலைத் திட்டங்களை செய்திருக்கின்றார் என்பது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எமது கட்சியிலிருந்து தகுதியான ஒருவரின் பெயர் குறிப்பிடப்படும். அது குறித்து தாம் இன்னும் தீர்மானிக்கவில்லை என தெரிவித்த அவர்,
மக்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கை ஏற்படும் வகையில், தாம் முடிவொன்றை எடுப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடு தற்போது ஓரளவுக்கு முன்னேற்றமடைந்து வருவதாகவும், ஜனாதிபதி என்ற பதவிக்கு முழு அனுபவம் கொண்ட ஒருவரே தேவை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி என்ற பதவியை தாமே வைத்திருப்பதை விட, தகுதியானவர்களுக்கு இடம்கொடுக்க வேண்டும் எனவும் சமல் ராஜபக்ஷ வலியுத்தினார்.
மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சமல் ராஜபக்ச அதிரடி அறிவிப்பு. ஜனாதிபதி வேட்பாளராக ஒருவரை தெரிவு செய்தற்கு முன், அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் எவ்வாறான வேலைத் திட்டங்களை செய்திருக்கின்றார் என்பது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.எமது கட்சியிலிருந்து தகுதியான ஒருவரின் பெயர் குறிப்பிடப்படும். அது குறித்து தாம் இன்னும் தீர்மானிக்கவில்லை என தெரிவித்த அவர்,மக்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கை ஏற்படும் வகையில், தாம் முடிவொன்றை எடுப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.நாடு தற்போது ஓரளவுக்கு முன்னேற்றமடைந்து வருவதாகவும், ஜனாதிபதி என்ற பதவிக்கு முழு அனுபவம் கொண்ட ஒருவரே தேவை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி என்ற பதவியை தாமே வைத்திருப்பதை விட, தகுதியானவர்களுக்கு இடம்கொடுக்க வேண்டும் எனவும் சமல் ராஜபக்ஷ வலியுத்தினார்.