• Nov 25 2024

சமல் ராஜபக்ஷவின் இரட்டை வேட நடத்தை..! சஜித் சபையில் கடும் எதிர்ப்பு! samugammedia

Chithra / Dec 2nd 2023, 2:48 pm
image

 


சிறப்புரிமை மீறல் சம்பவம் நடந்தால் உடனடியாக அந்த விவகாரத்தை ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்புவது சபாநாயகரின் பொறுப்பாகும். ஆனால், சபாநாயகர் அதைச் செய்யாமல், அஜித் ராஜபக்ஷ தலைமையில் ஒரு குழு ஸ்தாபிக்கப்பட்டு, அந்த குழு ஒரு தீர்மானத்துக்கு வந்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இன்றைய தினம் (02) பாராளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்த சஜித் மேலும் குறிப்பிடுகையில், 

தமது கருத்துப்படி, ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைக் குழுவுக்கு உதவியாக இந்தக் குழு நியமிக்கப்பட்டு, குழுவில் இருந்து முடிவெடுக்கப்பட்ட பிறகு இந்த தீர்மானம் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழுவின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டியிருந்தது. 

எனினும், சபாநாயகரால் நியமிக்கப்பட்ட குழுவின் தீர்மானத்தை பொருட்படுத்தாமல், சிறப்புரிமைக் குழு வேறு விதமாக செயற்படுகிறது. 

சிறப்புரிமைக் குழுவின் பணிகள் நியாயமானதாகவும், பக்கச்சார்பற்றதாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் இருக்க வேண்டும்.

அஜித் மன்னப்பெரும  செங்கோலை தொட்டதால் ஒரு மாத காலம் பாராளுமன்றத்தில் தடை விதிக்கப்பட்டது. பொருளாதாரக் குற்றவாளிகள் குறித்து தான் கேள்வி எழுப்பியபோது, தடங்கள் ஏற்படுத்திய நபருக்கு 2 வாரங்கள் மட்டுமே பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. 

எனவே பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் பெரேரா ஆகியோருக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் நியாயமற்றது. 

அஜித் ராஜபக்ஷ தலைவராக இருந்த குழு எடுத்துக்கொண்ட தீர்மானத்தில் சிறப்புரிமைக் குழுவின் தலைவராக இருக்கும் சமல் ராஜபக்ஷ கையெழுத்திட்டுள்ளார். இருந்தாலும், அவர் அந்த முடிவை வாபஸ் பெறுவதாகச் சொல்ல வேண்டியிருந்தும், அதையும் அவர் செய்யவில்லை. 

எனவே, ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைக் குழுவின் தலைவர் என்ற வகையில் சமல் ராஜபக்ஷ தனியான தீர்மானத்தை அறிவிக்க தார்மீக உரிமை இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்த நிகழ்ச்சி நிரலில் உள்ள தீர்மானத்தை வாபஸ் பெற்று, வேறு கலந்துரையாடல்களில் ஈடுபடுமாறும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.


சமல் ராஜபக்ஷவின் இரட்டை வேட நடத்தை. சஜித் சபையில் கடும் எதிர்ப்பு samugammedia  சிறப்புரிமை மீறல் சம்பவம் நடந்தால் உடனடியாக அந்த விவகாரத்தை ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்புவது சபாநாயகரின் பொறுப்பாகும். ஆனால், சபாநாயகர் அதைச் செய்யாமல், அஜித் ராஜபக்ஷ தலைமையில் ஒரு குழு ஸ்தாபிக்கப்பட்டு, அந்த குழு ஒரு தீர்மானத்துக்கு வந்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.இன்றைய தினம் (02) பாராளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்த சஜித் மேலும் குறிப்பிடுகையில், தமது கருத்துப்படி, ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைக் குழுவுக்கு உதவியாக இந்தக் குழு நியமிக்கப்பட்டு, குழுவில் இருந்து முடிவெடுக்கப்பட்ட பிறகு இந்த தீர்மானம் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழுவின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டியிருந்தது. எனினும், சபாநாயகரால் நியமிக்கப்பட்ட குழுவின் தீர்மானத்தை பொருட்படுத்தாமல், சிறப்புரிமைக் குழு வேறு விதமாக செயற்படுகிறது. சிறப்புரிமைக் குழுவின் பணிகள் நியாயமானதாகவும், பக்கச்சார்பற்றதாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் இருக்க வேண்டும்.அஜித் மன்னப்பெரும  செங்கோலை தொட்டதால் ஒரு மாத காலம் பாராளுமன்றத்தில் தடை விதிக்கப்பட்டது. பொருளாதாரக் குற்றவாளிகள் குறித்து தான் கேள்வி எழுப்பியபோது, தடங்கள் ஏற்படுத்திய நபருக்கு 2 வாரங்கள் மட்டுமே பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. எனவே பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் பெரேரா ஆகியோருக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் நியாயமற்றது. அஜித் ராஜபக்ஷ தலைவராக இருந்த குழு எடுத்துக்கொண்ட தீர்மானத்தில் சிறப்புரிமைக் குழுவின் தலைவராக இருக்கும் சமல் ராஜபக்ஷ கையெழுத்திட்டுள்ளார். இருந்தாலும், அவர் அந்த முடிவை வாபஸ் பெறுவதாகச் சொல்ல வேண்டியிருந்தும், அதையும் அவர் செய்யவில்லை. எனவே, ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைக் குழுவின் தலைவர் என்ற வகையில் சமல் ராஜபக்ஷ தனியான தீர்மானத்தை அறிவிக்க தார்மீக உரிமை இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்த நிகழ்ச்சி நிரலில் உள்ள தீர்மானத்தை வாபஸ் பெற்று, வேறு கலந்துரையாடல்களில் ஈடுபடுமாறும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement