• Nov 22 2024

ஒரு செங்கல்லை கூட நட முடியாத சாணக்கியன் - பிள்ளையானின் வேலைத்திட்டங்களை குழப்ப முயற்சி..!

Chithra / Dec 10th 2023, 2:34 pm
image


கடந்த பாராளுமுன்ற தேர்தலின்போது 30வருட அபிவிருத்தி திட்ட முன்மொழிவினை கொண்டுவந்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் ஒரு செங்கல்லை கூட களுவாஞ்சிகுடி பகுதியில் நாட்டமுடியாத நிலையில் தாங்கள் முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்களை குழப்ப முனைவதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் களுவாஞ்சிகுடி பிரதேச அமைப்பாளர் யோகநாதன் லிபியன் தெரிவித்தார்.

இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஆண்மையில் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட வீதி புனரமைப்பு பணியின்போது முன்னாள் பிரதேசசபை உறுப்பினரும் சாணக்கியனின் ஆதரவாளருமான வினோராஜ் என்பவரினால் தாங்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தங்கள் மீது பொய்யான கருத்துகளை வெளியிட்டுவருவதாகவும்  தெரிவிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் எந்த அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுக்கமுடியாத நிலையில்,

 இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனால் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை குழப்புவதற்கு முனைவதாகவும் குற்றச்சாட்டுகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

ஒரு செங்கல்லை கூட நட முடியாத சாணக்கியன் - பிள்ளையானின் வேலைத்திட்டங்களை குழப்ப முயற்சி. கடந்த பாராளுமுன்ற தேர்தலின்போது 30வருட அபிவிருத்தி திட்ட முன்மொழிவினை கொண்டுவந்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் ஒரு செங்கல்லை கூட களுவாஞ்சிகுடி பகுதியில் நாட்டமுடியாத நிலையில் தாங்கள் முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்களை குழப்ப முனைவதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் களுவாஞ்சிகுடி பிரதேச அமைப்பாளர் யோகநாதன் லிபியன் தெரிவித்தார்.இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.ஆண்மையில் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட வீதி புனரமைப்பு பணியின்போது முன்னாள் பிரதேசசபை உறுப்பினரும் சாணக்கியனின் ஆதரவாளருமான வினோராஜ் என்பவரினால் தாங்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தங்கள் மீது பொய்யான கருத்துகளை வெளியிட்டுவருவதாகவும்  தெரிவிக்கப்பட்டது.பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனால் எந்த அபிவிருத்தி நடவடிக்கைகளையும் முன்னெடுக்கமுடியாத நிலையில், இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனால் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை குழப்புவதற்கு முனைவதாகவும் குற்றச்சாட்டுகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement