எம் மக்கள் மீது அளவுகடந்த அன்பு கொண்ட புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்கள் அடக்கம் செயப்படுள்ள சென்னை கோயம்பேடு பகுதியில் இருக்கும் அவரது கட்சி அலுவலகத்தில் சென்று வட கிழக்கு மக்கள் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அஞ்சலி செலுத்தினர்.
அதாவது சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த்தின் நினைவிடத்திற்கு நேற்றைய தினம் (13.01.2024) சாணக்கியன் நேரில் சென்றுள்ளார்.
பிறகு அங்குள்ள ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,
தென்னிந்திய நடிகர் மற்றும் தே.மு.தி.கவின் முன்னாள் தலைவர் விஜயகாந்த் அவர்கள் 80 மற்றும் 90 ஆண்டு காலப்பகுதியில் தமிழ் ஈழ போராட்டத்துக்கு மிக முக்கிய ஆதரவு வழங்கியவர்களில் மிக முக்கியமான ஒருவர்.
மேலும் எமக்கான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியானவர். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் எனில் அவரது ஆதரவாளர்கள் ஈழத் தமிழர்களுடன் மற்றும் ஈழ தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து இவ் போராட்டத்துக்கு வலு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என சாணக்கியன் -கூறியுள்ளார்.
தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தே.மு.தி.க தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் அவரது நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த நடிகர் விஜயகாந்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய சாணக்கியன் எ.ம்.பி. எம் மக்கள் மீது அளவுகடந்த அன்பு கொண்ட புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்கள் அடக்கம் செயப்படுள்ள சென்னை கோயம்பேடு பகுதியில் இருக்கும் அவரது கட்சி அலுவலகத்தில் சென்று வட கிழக்கு மக்கள் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அஞ்சலி செலுத்தினர். அதாவது சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த்தின் நினைவிடத்திற்கு நேற்றைய தினம் (13.01.2024) சாணக்கியன் நேரில் சென்றுள்ளார்.பிறகு அங்குள்ள ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,, தென்னிந்திய நடிகர் மற்றும் தே.மு.தி.கவின் முன்னாள் தலைவர் விஜயகாந்த் அவர்கள் 80 மற்றும் 90 ஆண்டு காலப்பகுதியில் தமிழ் ஈழ போராட்டத்துக்கு மிக முக்கிய ஆதரவு வழங்கியவர்களில் மிக முக்கியமான ஒருவர். மேலும் எமக்கான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியானவர். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் எனில் அவரது ஆதரவாளர்கள் ஈழத் தமிழர்களுடன் மற்றும் ஈழ தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து இவ் போராட்டத்துக்கு வலு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என சாணக்கியன் -கூறியுள்ளார்.தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தே.மு.தி.க தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் அவரது நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.