ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வலைப்பந்து வீராங்கனை செமினி அல்விஸிடம் தேசிய ஒழுக்காற்று குழு இன்று (14) அவர் தரப்பிலான நிலைப்பாட்டினை தெரிவிக்க வாய்ப்பு வழங்கியுள்ளது.
அங்கு, இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகமையில் அவர் விசாரிக்கப்படுவார், அங்கு அவர் விரும்பினால் ‘பி’ மாதிரி பரிசோதனையை கோரலாம்.
ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனம் நடத்திய சோதனையில் ஊக்கமருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேலதிக விசாரணைகள் முடியும் வரை அவர் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
செமினி அல்விஸின் ‘ஏ’ சிறுநீர் மாதிரியில் தசை வளர்ச்சிக்கு உதவும் தடை செய்யப்பட்ட அனபோலிக் ஸ்டெராய்டுகள் இருந்ததாக மருத்துவ அறிக்கை கூறுகிறது.
ஊக்கமருந்து குற்றச்சாட்டில் செமினிக்கு கருத்துக் கூற வாய்ப்பு ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வலைப்பந்து வீராங்கனை செமினி அல்விஸிடம் தேசிய ஒழுக்காற்று குழு இன்று (14) அவர் தரப்பிலான நிலைப்பாட்டினை தெரிவிக்க வாய்ப்பு வழங்கியுள்ளது.அங்கு, இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகமையில் அவர் விசாரிக்கப்படுவார், அங்கு அவர் விரும்பினால் ‘பி’ மாதிரி பரிசோதனையை கோரலாம்.ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிறுவனம் நடத்திய சோதனையில் ஊக்கமருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக மேலதிக விசாரணைகள் முடியும் வரை அவர் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.செமினி அல்விஸின் ‘ஏ’ சிறுநீர் மாதிரியில் தசை வளர்ச்சிக்கு உதவும் தடை செய்யப்பட்ட அனபோலிக் ஸ்டெராய்டுகள் இருந்ததாக மருத்துவ அறிக்கை கூறுகிறது.