• Apr 15 2026

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு; கடல்சார் ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Chithra / Feb 24th 2026, 8:08 am
image


தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 


நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். 


இதேவேளை நாட்டிற்கு வடகிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசமானது வடகிழக்குத் திசையினூடாக நகர்வதுடன் மேலும் நலிவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதன் தாக்கத்தின் காரணமாக மணித்தியாலத்திற்கு சுமார் 50 - 60 km வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் இடியுடன் கூடிய பலத்த மழையும் செய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதேவேளை இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும். எனவே இக்கடல் பிராந்தியத்திற்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 20 - 40 km  வேகத்தில் வடமேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.


நாட்டின் சில பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு; கடல்சார் ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இதேவேளை நாட்டிற்கு வடகிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசமானது வடகிழக்குத் திசையினூடாக நகர்வதுடன் மேலும் நலிவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் தாக்கத்தின் காரணமாக மணித்தியாலத்திற்கு சுமார் 50 - 60 km வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் இடியுடன் கூடிய பலத்த மழையும் செய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதேவேளை இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும். எனவே இக்கடல் பிராந்தியத்திற்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 20 - 40 km  வேகத்தில் வடமேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement