தமது ஆட்சியில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவோம், ஊழல் மோடிகளை இல்லாதொழிப்போம், சமூக சீர்திருத்தங்களை செய்வோம் என்று கூறிவரும் சந்திரசேகரன் குழுவினர் யாழ்பாணத்தில் பல கிராமங்களிலும் சமூக சீர்கேடாக பல விளையாட்டுக்களை செய்கின்றார்கள். அவர்களது இந்த சித்து விளையாட்டுக்கள் விரைவில் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் வெளியாகும் என வலிகாமம் கிழக்கின் முன்னாள் தவிசாளர் நிரோஸ் சவால் விடுத்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (17) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த அவர் மேலும் கூறுகையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார மேடைகளில் ஜனாதிபதியின் பிரசாரப் பேச்சுக்கள் மிகவும் கீழ்த்தரமானதாகவும் மக்களை அச்சுறுத்துவதாகவும் இருக்கின்றன.
குறிப்பாக தன்னுடைய அரசின் கீழ் உள்ளூராட்சி மன்றங்கள் வந்தால் தான் அவிருத்திக்கானான நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மிரட்டலாக கூறுகின்றார்.
இது அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் அச்சுறுத்தும் அரசியல் கலாசாரத்தை காட்டுகின்றது. அதுமட்டுமல்லாது மக்களையும் தனித்துவமான சபைகளினதும் அதிகாரங்களை அச்சுறுத்துவதாகவும் இருக்கின்றது.
இவ்வாறு சிறுமைத்தனமாக ஜனாதிபதி செயற்படுவது வெட்கக் கேடானது.
உள்ளூராட்சி மன்றங்கள் அரசின் எடுபிடிகள் அல்ல. அவை உள்ளூர் வளங்களை கொண்டு மக்கள் தமது பிரதேசத்தின் ஆளுகையை முன்னெடுக்கும் ஒரு அபிவிருத்திக்கான அரசியல் கட்டமைப்பு.
மக்களிடம் பெறும் சோலை வரியாலும், முத்திரை தீர்வை வரியாலும், நீதிமன்ற குற்ற தண்டப் பணங்கள், சந்தை குத்தகைகளூடாக கிடைக்கும் வருமானங்கள் கடைத் தொகுதிகளின் வரிகளூடாக கிடைக்கும் பெரு நிதிகளே சபைகளின் நிதி பெறும் வழிகளாக இருக்கின்றன.
அந்த வகையில் உளூராட்சி மன்றங்கள் தத்தமது வழங்களை கொண்டுதான் நிதியை ஈட்டி தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனவே தவிர மத்திய அரசின் தயவில் உள்ளூராட்சி மன்றங்களும் செயற்படவில்லை என்பதை அனுரவும், அவருடைய நாடளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தெரிந்துகொள்ளவேண்டும்.
ஒரு உள்ளூர் அதிகார சபையின் ஆளுகைக்குள்ளேயே அப்பிரதேசத்தின் அனைத்து செயற்றிட்டங்களும் அவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் கொண்டது.
உள்ளூராட்சி மன்றங்கள் தனித்துவம் கொண்டவை. சபைகள் ஒவ்வொன்றும் ஒரு குட்டி அரசாங்கம். அதன் தவிசாளருக்கு அப்பிரதேச சபையின் உச்ச அதிகாரம் இருக்கின்றது.
இதில் மக்கள் தெளிவுற வேண்டும்.
மேலும் சமூக நலன்புரி திட்டங்களை வழங்குவதாக கூறி சர்வதேச நடுகளிடம் இருந்து வரும் பல நூறு மில்லியன்களை பெற்று வெளிவிவகார அமைச்சு என்ற போர்வையில் அதன்னூடாக கையாண்டு சபைகளுக்கு நிதிகளை விடுவிக்கும் முறையை கையாண்டு வருகின்றன.
அதன்படி தற்போது கிடைக்கும் நிதியை மத்திக்கு கையகப்படுத்தவே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.
இதேவேளை பல பொய்களை கூறி மக்களை ஏமாற்றிய அனுர அரசு, அதில் தோல்விகண்டு இயலாமல் போனதால் இப்போது அச்சுறுத்தும் செயற்பாடாக தன்னை முன்னெடுக்க முயல்கின்றது.
அதிமட்டுமல்லாது சந்திரசேகரன் குழுவினர் பலூன் ஊதிக்கொண்டிருக்கும் ஒரு சிறு பிள்ளைகள்.
இந்த பால்குடிகள் ராஜபக்சர்கள் கூட செய்யாத அடக்கு முறைகளையும், அனியாயங்களையும் அட்டூழியங்களையும் செய்கின்றனர்.
எனவே மக்கள் இதில் தெளிவாக இருப்பது அவசியம். அதுமட்டுமல்லது தமிழ் மக்களின் பிரதேசங்களில் காலூன்றினால் அது தமிழ் மக்களின் ஒட்டுமொத்த இருப்பையும் இல்லாது செய்துவிடும் என்றும் தெரிவித்திருந்தார்.
சந்திரசேகரன் குழுவின் யாழ்ப்பாண சித்து விளையாட்டுக்கள் விரைவில் அம்பலமாகும் - முன்னாள் தவிசாளர் நிரோஸ் பகிரங்கம் தமது ஆட்சியில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவோம், ஊழல் மோடிகளை இல்லாதொழிப்போம், சமூக சீர்திருத்தங்களை செய்வோம் என்று கூறிவரும் சந்திரசேகரன் குழுவினர் யாழ்பாணத்தில் பல கிராமங்களிலும் சமூக சீர்கேடாக பல விளையாட்டுக்களை செய்கின்றார்கள். அவர்களது இந்த சித்து விளையாட்டுக்கள் விரைவில் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் வெளியாகும் என வலிகாமம் கிழக்கின் முன்னாள் தவிசாளர் நிரோஸ் சவால் விடுத்துள்ளார்.யாழ். ஊடக அமையத்தில் இன்று (17) ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த அவர் மேலும் கூறுகையில்,உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார மேடைகளில் ஜனாதிபதியின் பிரசாரப் பேச்சுக்கள் மிகவும் கீழ்த்தரமானதாகவும் மக்களை அச்சுறுத்துவதாகவும் இருக்கின்றன.குறிப்பாக தன்னுடைய அரசின் கீழ் உள்ளூராட்சி மன்றங்கள் வந்தால் தான் அவிருத்திக்கானான நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மிரட்டலாக கூறுகின்றார்.இது அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் அச்சுறுத்தும் அரசியல் கலாசாரத்தை காட்டுகின்றது. அதுமட்டுமல்லாது மக்களையும் தனித்துவமான சபைகளினதும் அதிகாரங்களை அச்சுறுத்துவதாகவும் இருக்கின்றது.இவ்வாறு சிறுமைத்தனமாக ஜனாதிபதி செயற்படுவது வெட்கக் கேடானது.உள்ளூராட்சி மன்றங்கள் அரசின் எடுபிடிகள் அல்ல. அவை உள்ளூர் வளங்களை கொண்டு மக்கள் தமது பிரதேசத்தின் ஆளுகையை முன்னெடுக்கும் ஒரு அபிவிருத்திக்கான அரசியல் கட்டமைப்பு.மக்களிடம் பெறும் சோலை வரியாலும், முத்திரை தீர்வை வரியாலும், நீதிமன்ற குற்ற தண்டப் பணங்கள், சந்தை குத்தகைகளூடாக கிடைக்கும் வருமானங்கள் கடைத் தொகுதிகளின் வரிகளூடாக கிடைக்கும் பெரு நிதிகளே சபைகளின் நிதி பெறும் வழிகளாக இருக்கின்றன.அந்த வகையில் உளூராட்சி மன்றங்கள் தத்தமது வழங்களை கொண்டுதான் நிதியை ஈட்டி தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனவே தவிர மத்திய அரசின் தயவில் உள்ளூராட்சி மன்றங்களும் செயற்படவில்லை என்பதை அனுரவும், அவருடைய நாடளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தெரிந்துகொள்ளவேண்டும்.ஒரு உள்ளூர் அதிகார சபையின் ஆளுகைக்குள்ளேயே அப்பிரதேசத்தின் அனைத்து செயற்றிட்டங்களும் அவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் கொண்டது.உள்ளூராட்சி மன்றங்கள் தனித்துவம் கொண்டவை. சபைகள் ஒவ்வொன்றும் ஒரு குட்டி அரசாங்கம். அதன் தவிசாளருக்கு அப்பிரதேச சபையின் உச்ச அதிகாரம் இருக்கின்றது.இதில் மக்கள் தெளிவுற வேண்டும்.மேலும் சமூக நலன்புரி திட்டங்களை வழங்குவதாக கூறி சர்வதேச நடுகளிடம் இருந்து வரும் பல நூறு மில்லியன்களை பெற்று வெளிவிவகார அமைச்சு என்ற போர்வையில் அதன்னூடாக கையாண்டு சபைகளுக்கு நிதிகளை விடுவிக்கும் முறையை கையாண்டு வருகின்றன.அதன்படி தற்போது கிடைக்கும் நிதியை மத்திக்கு கையகப்படுத்தவே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். இதேவேளை பல பொய்களை கூறி மக்களை ஏமாற்றிய அனுர அரசு, அதில் தோல்விகண்டு இயலாமல் போனதால் இப்போது அச்சுறுத்தும் செயற்பாடாக தன்னை முன்னெடுக்க முயல்கின்றது.அதிமட்டுமல்லாது சந்திரசேகரன் குழுவினர் பலூன் ஊதிக்கொண்டிருக்கும் ஒரு சிறு பிள்ளைகள்.இந்த பால்குடிகள் ராஜபக்சர்கள் கூட செய்யாத அடக்கு முறைகளையும், அனியாயங்களையும் அட்டூழியங்களையும் செய்கின்றனர்.எனவே மக்கள் இதில் தெளிவாக இருப்பது அவசியம். அதுமட்டுமல்லது தமிழ் மக்களின் பிரதேசங்களில் காலூன்றினால் அது தமிழ் மக்களின் ஒட்டுமொத்த இருப்பையும் இல்லாது செய்துவிடும் என்றும் தெரிவித்திருந்தார்.