இந்த வருட இறுதியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பிரதான கட்சிகள் தமது ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் ஜனாதிபதி தேர்தல் கூட்டணி தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இவ்வாறானதொரு நிலையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எந்த வேட்பாளரையும் ஆதரிக்கும் தீர்மானத்தை இதுவரை தான் எடுக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு ஆதரவாக சந்திரிகா களமிறங்குகிறார் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமையை பொறுப்பேற்கவுள்ளார் என கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அதனை சந்திரிகாவின் பணிமனை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறித்த இரு விடயங்கள் தொடர்பிலும் சந்திரிகா எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. இது தொடர்பில் ஊடகங்கள், சமூகவலைதளங்கள் வெளியிட்ட தகவல்கள் பொய்யானவை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சந்திரிகா எடுத்த தீர்மானம்.samugammedia இந்த வருட இறுதியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பிரதான கட்சிகள் தமது ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் ஜனாதிபதி தேர்தல் கூட்டணி தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.இவ்வாறானதொரு நிலையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எந்த வேட்பாளரையும் ஆதரிக்கும் தீர்மானத்தை இதுவரை தான் எடுக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு ஆதரவாக சந்திரிகா களமிறங்குகிறார் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமையை பொறுப்பேற்கவுள்ளார் என கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அதனை சந்திரிகாவின் பணிமனை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.குறித்த இரு விடயங்கள் தொடர்பிலும் சந்திரிகா எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. இது தொடர்பில் ஊடகங்கள், சமூகவலைதளங்கள் வெளியிட்ட தகவல்கள் பொய்யானவை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.