வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுபவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக இலங்கை உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற நிதி மோசடிகள் காரணமாக தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும், இது வேலை தேடுபவர்களிடையே பெரும் சோர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் சங்கத்தின் உறுப்பினர் முஹம்மது அசாம் தெரிவித்துள்ளார்.
இந்த வீழ்ச்சியின் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்பும் நடவடிக்கை குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளது.
அரசாங்கத்துடன் இணைந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு நடைமுறைகளை முறைப்படுத்துவதன் மூலம், அடுத்த ஆண்டில் தொழிலாளர் பணப்பரிமாற்றத்தை 10 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்த முடியும் என சங்கம் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளில் வேலை தேடும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுபவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக இலங்கை உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற நிதி மோசடிகள் காரணமாக தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும், இது வேலை தேடுபவர்களிடையே பெரும் சோர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் சங்கத்தின் உறுப்பினர் முஹம்மது அசாம் தெரிவித்துள்ளார். இந்த வீழ்ச்சியின் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்பும் நடவடிக்கை குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளது. அரசாங்கத்துடன் இணைந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு நடைமுறைகளை முறைப்படுத்துவதன் மூலம், அடுத்த ஆண்டில் தொழிலாளர் பணப்பரிமாற்றத்தை 10 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்த முடியும் என சங்கம் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.