• Sep 27 2024

Chithra / Sep 26th 2024, 2:05 pm
image

Advertisement


உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா, உள்நாட்டு சந்தையில் அரிசி விலையை குறைக்கும் நோக்கத்துடன் அரிசி ஏற்றுமதியை நிறுத்த நடவடிக்கை எடுத்தது.

எனினும், உயர்தர அரிசியாகக் கருதப்படும் பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கு அவர்கள் தடை விதிக்கவில்லை.

இருப்பினும், இந்தியா ஒரு மெட்ரிக் தொன் பாஸ்மதி அரிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை 950 அமெரிக்க டொலர்களாக விதித்துள்ளது.

இத்தகைய கட்டுப்பாடு இருந்தபோதிலும், இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி 20% அதிகரித்து 1.9 மில்லியன் மெட்ரிக் தொன்னாக பதிவாகியுள்ளது.

தற்போது இந்த விலை கட்டுப்பாட்டை நீக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இந்தியாவில் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய அறுவடை சந்தைக்கு வரவுள்ள நிலையில், விலைக் கட்டுப்பாடுகளை இந்தியா நீக்கியுள்ளது.

இந்தியாவில் பாஸ்மதி அரிசி உற்பத்தி இந்த ஆண்டு 10%-12% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு,  கனடா, ஈராக், ஓமன், சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு 5.2 மில்லியன் மெட்ரிக் தொன் பாஸ்மதி அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

பாஸ்மதி அரிசியின் விலையில் மாற்றம் உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா, உள்நாட்டு சந்தையில் அரிசி விலையை குறைக்கும் நோக்கத்துடன் அரிசி ஏற்றுமதியை நிறுத்த நடவடிக்கை எடுத்தது.எனினும், உயர்தர அரிசியாகக் கருதப்படும் பாஸ்மதி அரிசி ஏற்றுமதிக்கு அவர்கள் தடை விதிக்கவில்லை.இருப்பினும், இந்தியா ஒரு மெட்ரிக் தொன் பாஸ்மதி அரிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை 950 அமெரிக்க டொலர்களாக விதித்துள்ளது.இத்தகைய கட்டுப்பாடு இருந்தபோதிலும், இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இந்தியாவின் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி 20% அதிகரித்து 1.9 மில்லியன் மெட்ரிக் தொன்னாக பதிவாகியுள்ளது.தற்போது இந்த விலை கட்டுப்பாட்டை நீக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.இதன்படி, இந்தியாவில் பாஸ்மதி அரிசி ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.புதிய அறுவடை சந்தைக்கு வரவுள்ள நிலையில், விலைக் கட்டுப்பாடுகளை இந்தியா நீக்கியுள்ளது.இந்தியாவில் பாஸ்மதி அரிசி உற்பத்தி இந்த ஆண்டு 10%-12% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டு,  கனடா, ஈராக், ஓமன், சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு 5.2 மில்லியன் மெட்ரிக் தொன் பாஸ்மதி அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement