• Jun 26 2024

இலங்கையில் குழந்தை பிறப்பு வீதத்தில் ஏற்பட்ட மாற்றம் - எச்சரிக்கும் மருத்துவர்கள்

Chithra / Jun 18th 2024, 8:03 am
image

Advertisement

  

இலங்கையில் குழந்தை பிறப்பு வீதம் குறிப்பிடத்தக்களவு சரிவினை சந்தித்துள்ளதுடன் கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் குழந்தை பிறப்புக்கள் சுமார் ஒரு லட்சத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என மகப்பேற்று மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மரணங்களும் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இந் நிலைமையினால் நாட்டில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து இளம் தலைமுறையினர் குறைந்து ஊழியப்படையில் பிரச்சினை ஏற்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டில் நாட்டில் 325000 குழந்தை பிறப்புக்கள் பதிவாகியுள்ளன.

எனினும் 2023ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 247000 மாக வீழ்ச்சியடைந்துள்ளது.

மேலும் 2017ம் ஆண்டில் நாட்டின் மரணங்களின் எண்ணிக்கை 140000 மாக காணப்பட்டதாகவும், 2023ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 181000 மாக அதிகரித்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த நிலைமை நீடித்தால் நாட்டில் ஊழிய வளம் குறைவடையும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இலங்கையில் குழந்தை பிறப்பு வீதத்தில் ஏற்பட்ட மாற்றம் - எச்சரிக்கும் மருத்துவர்கள்   இலங்கையில் குழந்தை பிறப்பு வீதம் குறிப்பிடத்தக்களவு சரிவினை சந்தித்துள்ளதுடன் கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் குழந்தை பிறப்புக்கள் சுமார் ஒரு லட்சத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என மகப்பேற்று மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.மரணங்களும் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.இந் நிலைமையினால் நாட்டில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து இளம் தலைமுறையினர் குறைந்து ஊழியப்படையில் பிரச்சினை ஏற்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2017ம் ஆண்டில் நாட்டில் 325000 குழந்தை பிறப்புக்கள் பதிவாகியுள்ளன.எனினும் 2023ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 247000 மாக வீழ்ச்சியடைந்துள்ளது.மேலும் 2017ம் ஆண்டில் நாட்டின் மரணங்களின் எண்ணிக்கை 140000 மாக காணப்பட்டதாகவும், 2023ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 181000 மாக அதிகரித்துள்ளது.கடந்த ஐந்து ஆண்டுகளாக மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.இந்த நிலைமை நீடித்தால் நாட்டில் ஊழிய வளம் குறைவடையும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement