• Jun 26 2024

திடீரென தரையில் விழுந்த இளம் பெண் மரணம் - போலி மசாஜ் நிலையத்தில் சம்பவம்

Chithra / Jun 18th 2024, 8:12 am
image

Advertisement

 

கொழும்பின் புறநகர் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் பெண்களை பணத்திற்கு விற்பனை செய்வதாக கூறப்படும் இடத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தலவத்துகொட பன்னிபிட்டிய வீதியில் அமைந்துள்ள வீடொன்றில்  இடம்பெற்றுள்ளது.

மகியங்கனை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கிராமத்திற்கு சென்று, நேற்றுமுன்தினம் மாலை தனது பணியிடத்திற்கு வந்த சில நிமிடங்களில் அவர் தரையில் விழுந்துள்ளார்.

அங்கிருந்தவர்கள் அவரை தலங்கம பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், பிரேத பரிசோதனை மேற்கொள்ள மருத்துவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திடீரென தரையில் விழுந்த இளம் பெண் மரணம் - போலி மசாஜ் நிலையத்தில் சம்பவம்  கொழும்பின் புறநகர் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் பெண்களை பணத்திற்கு விற்பனை செய்வதாக கூறப்படும் இடத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் தலவத்துகொட பன்னிபிட்டிய வீதியில் அமைந்துள்ள வீடொன்றில்  இடம்பெற்றுள்ளது.மகியங்கனை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் கிராமத்திற்கு சென்று, நேற்றுமுன்தினம் மாலை தனது பணியிடத்திற்கு வந்த சில நிமிடங்களில் அவர் தரையில் விழுந்துள்ளார்.அங்கிருந்தவர்கள் அவரை தலங்கம பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பெண் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.இந்நிலையில், பிரேத பரிசோதனை மேற்கொள்ள மருத்துவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement