• Apr 02 2025

ஜனாதிபதி ரணிலுடன் இணைய தீவிர முயற்சியில் சன்ன ஜயசுமண..! வெளியான தகவல்

Chithra / Jan 29th 2024, 8:12 am
image

 

முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

டலஸ் அழகப்பெரும தலைமையில் பொதுஜன பெரமுன அதிருப்தியாளர்கள் குழு, நிதஹஸ் ஜனதா சபாவை உருவாக்கிய போது சன்ன ஜயசுமணவும் அதில் உள்ளடங்கியிருந்தார்.

அதன் பின்னர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் சன்ன ஜயசுமண உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நிதஹஸ் ஜனதா சபாவை விட்டும் விலகி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து  கொண்டனர்.

எனினும் அங்கு சிறுபான்மைக் கட்சித் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியூதீன் ஆகியோரின் கடுமையான எதிர்ப்பு காரணமாக சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் சன்ன ஜயசுமணவை ஒதுக்கி நடக்கத் தலைப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ள சன்ன ஜயசுமண, தற்போது ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியிலும் அரசாங்கத்திலும் இணைந்து கொள்வதற்கு தூதுவிடத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணிலுடன் இணைய தீவிர முயற்சியில் சன்ன ஜயசுமண. வெளியான தகவல்  முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.டலஸ் அழகப்பெரும தலைமையில் பொதுஜன பெரமுன அதிருப்தியாளர்கள் குழு, நிதஹஸ் ஜனதா சபாவை உருவாக்கிய போது சன்ன ஜயசுமணவும் அதில் உள்ளடங்கியிருந்தார்.அதன் பின்னர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் சன்ன ஜயசுமண உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நிதஹஸ் ஜனதா சபாவை விட்டும் விலகி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து  கொண்டனர்.எனினும் அங்கு சிறுபான்மைக் கட்சித் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியூதீன் ஆகியோரின் கடுமையான எதிர்ப்பு காரணமாக சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் சன்ன ஜயசுமணவை ஒதுக்கி நடக்கத் தலைப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ள சன்ன ஜயசுமண, தற்போது ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியிலும் அரசாங்கத்திலும் இணைந்து கொள்வதற்கு தூதுவிடத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement