முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டத்தின் நிறைவில் கட்சியின் இரண்டு தரப்பிற்கு இடையில் முரண்பாட்டு நிலை ஏற்பட்டு, அது வாய்த்தர்க்கமாக மாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் சமூக ஊடக பிரதானி ஒருவருக்கும், சில அமைச்சர்களுக்கம் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
சில அமைச்சர்கள் ஜனாதிபதிக்காக கூடுதலாக குரல் கொடுப்பதாக சமூக ஊடக பிரதானி குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்போது சில அமைச்சர்கள் குறித்த நபரின் கருத்தை எதிர்த்துள்ளனர்.
அமைச்சர்களான கஞ்சன விஜேசசேகர, பிரசன்ன ரணதுங்க, பிரமித்த பண்டார தென்னக்கோன், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட சிலர் இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதனால் கட்சிக் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மொட்டு கட்சி கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பநிலை. அமைச்சர்கள் எதிர்ப்பு வெளியிட்டதால் பரபரப்பு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.கூட்டத்தின் நிறைவில் கட்சியின் இரண்டு தரப்பிற்கு இடையில் முரண்பாட்டு நிலை ஏற்பட்டு, அது வாய்த்தர்க்கமாக மாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் சமூக ஊடக பிரதானி ஒருவருக்கும், சில அமைச்சர்களுக்கம் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.சில அமைச்சர்கள் ஜனாதிபதிக்காக கூடுதலாக குரல் கொடுப்பதாக சமூக ஊடக பிரதானி குற்றம் சுமத்தியுள்ளார்.இதன்போது சில அமைச்சர்கள் குறித்த நபரின் கருத்தை எதிர்த்துள்ளனர்.அமைச்சர்களான கஞ்சன விஜேசசேகர, பிரசன்ன ரணதுங்க, பிரமித்த பண்டார தென்னக்கோன், நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே உள்ளிட்ட சிலர் இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.இதனால் கட்சிக் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.