• Nov 16 2024

இன,மத,மொழி கடந்து முன்னெடுக்கப்படும் சந்நிதியான் ஆச்சிரமத்தின் அறப்பணிகள்- மோகன் சுவாமிகள் சுட்டிக்காட்டு

Sharmi / Aug 22nd 2024, 3:36 pm
image

செல்வச் சந்நிதியான் ஆச்சிரமம் மதங்களைக் கடந்து இலங்கையின் பல பாகங்களிலும் கஷ்டப்படுபவர்களுக்கு உதவிகளை வழங்கி வருவதாக ஆச்சிரம  முதல்வர் மோகன் சுவாமிகள் தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து அன்னதான பணியில் இணைந்து கொண்ட நான் எனது குருநாதரின் வழிநடத்தலில் சந்நிதியான ஆச்சிரமத்தை வழிநடத்தி வருகிறேன்.

இங்கு நான் முதலாளி அல்ல. முருகன் தான் முதலாளி. அள்ளித் தருகிறான் ஏழைகளுக்கு இல்லை என்று வருபவர்களுக்கு அவன் அருளால்  அள்ளி வழங்கி வருகிறோம்.

யுத்த காலத்தில் துவிச்சக்கர வண்டி மூலம் நெல்லை பெற்று உரலில் போட்டு கோது நீக்கி முருகனை நாடிவரும் அடியவர்களுக்கு உணவு சமைத்து வழங்கினோம். 

நாம் யாரிடமும் அன்னதானத்துக்கு பணம் தாருங்கள் அல்லது எங்கள் ஆசிரமத்துக்கு உதவி செய்யுங்கள் என கேட்டது கிடையாது. 

ஆனாலும் எமது ஆரம்ப காலத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய நான்கு  அல்லது ஐந்து பேரிடம் உதவிகளைப் பெற்று ஆசிரமத்தை நடத்தி வந்தோம். 

இன்று மரம் பழுத்து பழமாக உள்ள நிலையில் பலரும் உதவி செய்கிறார்கள். ஆனாலும் எம்மை முன்பு வளர்த்து விட்டவர்களை நான் ஆச்சிரமத்தில் இருப்பவர்களுக்கு கூறியிருக்கிறேன் அவர்களை எக்காலத்திலும் நான் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும் என்று. 

முருகனின் ஆச்சிரமத்தில் தினமும் 60க்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு மூன்று நேர உணவு, தேநீர் வழங்கப்பட்டு வருகிறது. 

அதுமட்டுமல்லாது வாரத்தில் ஏழு நாட்களும் முருகனை நாடிவரும் அடியவர்களுக்கு இல்லை என்று கூறாமல் உணவு வழங்கி வருகிறோம். 

எமது ஆச்சிரமத்தால் இலங்கையில் உள்ள பல பாகங்களிலும் வறியப்பட்ட மக்களுக்கு அவர்களது பிரதேசம் சென்று உணவுப் பொருட்கள் மருத்துவ உபகரணங்கள் பாடசாலை மாணவர்களுக்கான உதவி திட்டங்கள் என பல்வேறு அறப்பணிகளை ஆற்றி வருகிறோம். 

கொரோனா இடர் காலப்பகுதியில் பல வைத்தியசாலைகளுக்கு மருந்து பொருட்களை வழங்கியதோடு முடக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சமைத்த உணவுகளையும் வழங்கினோம். 

சந்நிதியான்  ஆச்சிரமம் மதங்களைக் கடந்து அறப்பணிகளை ஆற்றி வருகிறது. 

எமது ஆச்சிரமத்தில் முஸ்லிம், கிறிஸ்தவ பிள்ளைகள் உணவருந்துகிறார்கள். அவர்களின் கல்விக்கு தேவையான உதவி திட்டங்களை வழங்கி வருகிறோம். 

கஷ்டப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதம் தலா 6 ஆயிரம் ரூபா வீதம் வழங்கி வருகிறோம். 

கஷ்டப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த வெளி மாவட்டத்திலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள பெண் மாணவிகள் தங்குமிடத்திற்காக அதிக அளவு நிதியை செலவழிக்கிறார்கள். 

அவர்களது குறையை தீர்க்கும் முகமாக புலம்பெயர் நாட்டில் வசிக்கும் குடும்பம் ஒன்று காணியை அன்பளிப்பாக தந்துள்ள நிலையில் மாணவிகள் தங்கக்கூடிய தங்குமிட விடுதியை அமைப்பதற்கு உத்தேசித்துள்ளோம் .

பண உதவிக்காக எம்மைப் பலர் நாடி வருகிறார்கள். அவர்கள் வரும்போது  பணம் இருக்காது.  உணவு வேண்டுமானால் இல்லை என்று கூறாமல் கொடுத்து விடுவோம் .

ஆனால் அவர்கள் இங்கு வந்து குறைகளை கூறும் போது முருகனின் திருவருள் மறுநாள் யாரோ ஒருவர் எமது வங்கி கணக்கிற்கு பணத்தை வழங்கு இருப்பார்.  தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களை அழைத்து பண உதவிகளை வழங்குவோம்.

எமது கையில் ஒன்றுமில்லை எல்லாம் சந்நிதியான் நாம் யாரிடமும் உதவி செய்யுங்கள் என்று தொலைபேசியிலோ அல்லது கடிதத்திலோ கேட்பது கிடையாது.

அவ்வாறே எவ்வளவு பணம் வருகிறது செலவு எவ்வளவு என்பதும் கணக்கு பார்ப்பது கிடையாது. 

நான் இருபது வருடங்களுக்கு மேலாக யாழ்ப்பாணத்தில் உள்ள எந்தவொரு ஆலயத்தையும் வழிபடுவதற்காகச் சென்றது கிடையாது நிகழ்வுகளுக்கு சென்றதும் இல்லை.

வீதியில் போகும்போது ஆலயங்களை வீதியில் நின்றபடி வணங்கிச் செல்வது வழமை. 

எனக்கு தெரியாமல் எனது 75 ஆவது பிறந்தநாள் நிகழ்வை கொண்டாட வேண்டும் என எனது அச்சிரம அடியவர்கள் ஊடகவியலாளர்களையும் அழைத்து விட்டார்கள். 

ஆகவே நீங்கள் கேள்விகளை கேட்டீர்கள் என் மனதில் பட்டதை கூறி இருக்கிறேன்.  முருகனின் அற்புதம் தருகிறான்.  இல்லை என்று வருபவர்களுக்கு வழங்குகிறோம்.

எமது அறப்பணிகள் இன,மத,மொழி கடந்து தொடர்ந்து இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இன,மத,மொழி கடந்து முன்னெடுக்கப்படும் சந்நிதியான் ஆச்சிரமத்தின் அறப்பணிகள்- மோகன் சுவாமிகள் சுட்டிக்காட்டு செல்வச் சந்நிதியான் ஆச்சிரமம் மதங்களைக் கடந்து இலங்கையின் பல பாகங்களிலும் கஷ்டப்படுபவர்களுக்கு உதவிகளை வழங்கி வருவதாக ஆச்சிரம  முதல்வர் மோகன் சுவாமிகள் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து அன்னதான பணியில் இணைந்து கொண்ட நான் எனது குருநாதரின் வழிநடத்தலில் சந்நிதியான ஆச்சிரமத்தை வழிநடத்தி வருகிறேன்.இங்கு நான் முதலாளி அல்ல. முருகன் தான் முதலாளி. அள்ளித் தருகிறான் ஏழைகளுக்கு இல்லை என்று வருபவர்களுக்கு அவன் அருளால்  அள்ளி வழங்கி வருகிறோம்.யுத்த காலத்தில் துவிச்சக்கர வண்டி மூலம் நெல்லை பெற்று உரலில் போட்டு கோது நீக்கி முருகனை நாடிவரும் அடியவர்களுக்கு உணவு சமைத்து வழங்கினோம். நாம் யாரிடமும் அன்னதானத்துக்கு பணம் தாருங்கள் அல்லது எங்கள் ஆசிரமத்துக்கு உதவி செய்யுங்கள் என கேட்டது கிடையாது. ஆனாலும் எமது ஆரம்ப காலத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய நான்கு  அல்லது ஐந்து பேரிடம் உதவிகளைப் பெற்று ஆசிரமத்தை நடத்தி வந்தோம். இன்று மரம் பழுத்து பழமாக உள்ள நிலையில் பலரும் உதவி செய்கிறார்கள். ஆனாலும் எம்மை முன்பு வளர்த்து விட்டவர்களை நான் ஆச்சிரமத்தில் இருப்பவர்களுக்கு கூறியிருக்கிறேன் அவர்களை எக்காலத்திலும் நான் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும் என்று. முருகனின் ஆச்சிரமத்தில் தினமும் 60க்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு மூன்று நேர உணவு, தேநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது வாரத்தில் ஏழு நாட்களும் முருகனை நாடிவரும் அடியவர்களுக்கு இல்லை என்று கூறாமல் உணவு வழங்கி வருகிறோம். எமது ஆச்சிரமத்தால் இலங்கையில் உள்ள பல பாகங்களிலும் வறியப்பட்ட மக்களுக்கு அவர்களது பிரதேசம் சென்று உணவுப் பொருட்கள் மருத்துவ உபகரணங்கள் பாடசாலை மாணவர்களுக்கான உதவி திட்டங்கள் என பல்வேறு அறப்பணிகளை ஆற்றி வருகிறோம். கொரோனா இடர் காலப்பகுதியில் பல வைத்தியசாலைகளுக்கு மருந்து பொருட்களை வழங்கியதோடு முடக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சமைத்த உணவுகளையும் வழங்கினோம். சந்நிதியான்  ஆச்சிரமம் மதங்களைக் கடந்து அறப்பணிகளை ஆற்றி வருகிறது. எமது ஆச்சிரமத்தில் முஸ்லிம், கிறிஸ்தவ பிள்ளைகள் உணவருந்துகிறார்கள். அவர்களின் கல்விக்கு தேவையான உதவி திட்டங்களை வழங்கி வருகிறோம். கஷ்டப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதம் தலா 6 ஆயிரம் ரூபா வீதம் வழங்கி வருகிறோம். கஷ்டப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த வெளி மாவட்டத்திலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள பெண் மாணவிகள் தங்குமிடத்திற்காக அதிக அளவு நிதியை செலவழிக்கிறார்கள். அவர்களது குறையை தீர்க்கும் முகமாக புலம்பெயர் நாட்டில் வசிக்கும் குடும்பம் ஒன்று காணியை அன்பளிப்பாக தந்துள்ள நிலையில் மாணவிகள் தங்கக்கூடிய தங்குமிட விடுதியை அமைப்பதற்கு உத்தேசித்துள்ளோம் .பண உதவிக்காக எம்மைப் பலர் நாடி வருகிறார்கள். அவர்கள் வரும்போது  பணம் இருக்காது.  உணவு வேண்டுமானால் இல்லை என்று கூறாமல் கொடுத்து விடுவோம் .ஆனால் அவர்கள் இங்கு வந்து குறைகளை கூறும் போது முருகனின் திருவருள் மறுநாள் யாரோ ஒருவர் எமது வங்கி கணக்கிற்கு பணத்தை வழங்கு இருப்பார்.  தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களை அழைத்து பண உதவிகளை வழங்குவோம்.எமது கையில் ஒன்றுமில்லை எல்லாம் சந்நிதியான் நாம் யாரிடமும் உதவி செய்யுங்கள் என்று தொலைபேசியிலோ அல்லது கடிதத்திலோ கேட்பது கிடையாது. அவ்வாறே எவ்வளவு பணம் வருகிறது செலவு எவ்வளவு என்பதும் கணக்கு பார்ப்பது கிடையாது. நான் இருபது வருடங்களுக்கு மேலாக யாழ்ப்பாணத்தில் உள்ள எந்தவொரு ஆலயத்தையும் வழிபடுவதற்காகச் சென்றது கிடையாது நிகழ்வுகளுக்கு சென்றதும் இல்லை.வீதியில் போகும்போது ஆலயங்களை வீதியில் நின்றபடி வணங்கிச் செல்வது வழமை. எனக்கு தெரியாமல் எனது 75 ஆவது பிறந்தநாள் நிகழ்வை கொண்டாட வேண்டும் என எனது அச்சிரம அடியவர்கள் ஊடகவியலாளர்களையும் அழைத்து விட்டார்கள். ஆகவே நீங்கள் கேள்விகளை கேட்டீர்கள் என் மனதில் பட்டதை கூறி இருக்கிறேன்.  முருகனின் அற்புதம் தருகிறான்.  இல்லை என்று வருபவர்களுக்கு வழங்குகிறோம். எமது அறப்பணிகள் இன,மத,மொழி கடந்து தொடர்ந்து இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement