இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது நுவரெலியாவிற்கு வெளியே யானைச் சின்னத்துடனும், இரத்தினபுரி, கேகாலை, கண்டி, பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளது.
கொழும்பில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
நுவரெலியா மக்கள் யானை சின்னத்தையே விரும்புவதாகவும், அதனால்தான் நுவரெலியாவுக்கு யானைச் சின்னம் தேர்வு செய்யப்பட்டது என்றார்.
மேலும், கட்டாயமாக ரூபாய் 1700 சம்பளத்தை தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தொண்டமான்கள் யானை மற்றும் சிலிண்டர் இரண்டிலிருந்தும் தேர்தலில் போட்டி. இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது நுவரெலியாவிற்கு வெளியே யானைச் சின்னத்துடனும், இரத்தினபுரி, கேகாலை, கண்டி, பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளது.கொழும்பில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.நுவரெலியா மக்கள் யானை சின்னத்தையே விரும்புவதாகவும், அதனால்தான் நுவரெலியாவுக்கு யானைச் சின்னம் தேர்வு செய்யப்பட்டது என்றார்.மேலும், கட்டாயமாக ரூபாய் 1700 சம்பளத்தை தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.