தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் மேடைகளில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது.
அரிசிக்கு நாட்டில் சிக்கல் நிலை எழுந்துள்ளது. அரிசி விநியோக பொறிமுறை உரியவாறு நிர்வகிக்கப்படாமையே அதற்கு காரணமாகும்.
கடந்த அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்திலும் கூட அரிசி விநியோகப் பொறிமுறையில் சிக்கல் நிலைகள் காணப்பட்டன.
ஆனால் அந்த அரசாங்கங்கள் உரியவாறு அந்த விடயத்தை கையாண்டமையை அவதானிக்க முடிந்தது.
ஆனால் இந்த அரசாங்கம் குறித்த விடயத்தை பூதாகரமாக்கியுள்ளது.
அரசாங்கம் இந்த விடயத்தை உரியவாறு முகாமை செய்யாமையே இதற்கு காரணமாகும் எனவும் தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அநுர அரசாங்கம்- சரித்த ஹேரத் குற்றச்சாட்டு. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,தேர்தல் மேடைகளில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது.அரிசிக்கு நாட்டில் சிக்கல் நிலை எழுந்துள்ளது. அரிசி விநியோக பொறிமுறை உரியவாறு நிர்வகிக்கப்படாமையே அதற்கு காரணமாகும்.கடந்த அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்திலும் கூட அரிசி விநியோகப் பொறிமுறையில் சிக்கல் நிலைகள் காணப்பட்டன. ஆனால் அந்த அரசாங்கங்கள் உரியவாறு அந்த விடயத்தை கையாண்டமையை அவதானிக்க முடிந்தது.ஆனால் இந்த அரசாங்கம் குறித்த விடயத்தை பூதாகரமாக்கியுள்ளது. அரசாங்கம் இந்த விடயத்தை உரியவாறு முகாமை செய்யாமையே இதற்கு காரணமாகும் எனவும் தெரிவித்தார்.