• May 05 2024

ஆஸ்திரேலிய அணிக்கு 175 ஓட்டங்கள் இலக்கு!samugammedia

Tamil nila / Dec 1st 2023, 10:27 pm
image

Advertisement

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்தியா ஆஸ்திரேலிய அணி பேட்டிங் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் – ருதுராஜ் களமிறங்கினர். வழக்கம் போல ஜெய்ஸ்வால் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்.

முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் குவித்த இந்த ஜோடியை ஆரோன் ஹார்டி பிரித்தார். ஜெய்ஸ்வால் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 8, சூர்யகுமார் யாதவ் 1 என அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

இதனையடுத்து ருதுராஜ் – ரிங்கு சிங் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை குவித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 32 ரன்களுக்கு வெளியேறினார்.

இந்நிலையில் ரிங்கு சிங்குடன் -ஜிதேஷ் சர்மா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். ஜிதேஷ் 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்த அக்சர் படேல் 0 ரன்னில் வெளியேறினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் 46 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவர்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


ஆஸ்திரேலிய அணிக்கு 175 ஓட்டங்கள் இலக்குsamugammedia இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது.இதில் டாஸ் வென்ற இந்தியா ஆஸ்திரேலிய அணி பேட்டிங் பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் – ருதுராஜ் களமிறங்கினர். வழக்கம் போல ஜெய்ஸ்வால் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்.முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் குவித்த இந்த ஜோடியை ஆரோன் ஹார்டி பிரித்தார். ஜெய்ஸ்வால் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 8, சூர்யகுமார் யாதவ் 1 என அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.இதனையடுத்து ருதுராஜ் – ரிங்கு சிங் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை குவித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் 32 ரன்களுக்கு வெளியேறினார்.இந்நிலையில் ரிங்கு சிங்குடன் -ஜிதேஷ் சர்மா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். ஜிதேஷ் 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.அடுத்த அக்சர் படேல் 0 ரன்னில் வெளியேறினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் 46 ரன்னில் அவுட் ஆனார்.இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்தது.ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவர்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Advertisement

Advertisement

Advertisement