பெங்களூரு, மும்பையிலிருந்து சென்னைக்கு வருகை தந்த 2 விமானங்கள் பனிமூட்டம் காரணமாக அரை மணி நேரம் தாமதாக வந்தடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன.
வழமைக்கு மாறாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவுவதாக கூறப்படுகின்றது.
சென்னையினை வந்தடைந்த விமானங்கள் பனிமூட்டம் காரணமாக தரையிறங்க முடியாத நிலையில் சுற்றிய நிலையில் சிறிது தாமதமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பிப்ரவரி மாதம் தொடங்கிய போதும் பனிப்பொழிவு குறைவடையாது, கடந்த சில தினங்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவுடன் , மூடுபனியும் படர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதன் காரணமாக காலை 7.30 மணி வரை வானம் சூரிய வெளிச்சமின்றி இருட்டாக காணப்படுவதோடு, முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் சாலையில் ஊர்ந்து செல்கின்ற துர்ப்பாக்கிய நிலைமை காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
திடீரென தாமதமான விமானங்கள்: குழப்பமடைந்த பயணிகள் பெங்களூரு, மும்பையிலிருந்து சென்னைக்கு வருகை தந்த 2 விமானங்கள் பனிமூட்டம் காரணமாக அரை மணி நேரம் தாமதாக வந்தடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன.வழமைக்கு மாறாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவுவதாக கூறப்படுகின்றது. சென்னையினை வந்தடைந்த விமானங்கள் பனிமூட்டம் காரணமாக தரையிறங்க முடியாத நிலையில் சுற்றிய நிலையில் சிறிது தாமதமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், பிப்ரவரி மாதம் தொடங்கிய போதும் பனிப்பொழிவு குறைவடையாது, கடந்த சில தினங்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவுடன் , மூடுபனியும் படர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.அதன் காரணமாக காலை 7.30 மணி வரை வானம் சூரிய வெளிச்சமின்றி இருட்டாக காணப்படுவதோடு, முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனங்கள் சாலையில் ஊர்ந்து செல்கின்ற துர்ப்பாக்கிய நிலைமை காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன