சொந்தமாக இருக்க இடம், ஒரு அழகான வாழ்க்கை” எனும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் விசேட திட்டத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இன்று(30) நடைபெற்றது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் (NHDA) திருகோணமலை மாவட்டக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்தனர்.
இன்றைய தினம் முதலாம் கட்டமாக 80 வீடுகளுக்கான பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதற்கான 150,000 ரூபாவுக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக, இந்தத் திட்டத்தின் கீழ் 69 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் வீடமைப்புத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் கீழ், மொத்தமாக 250 வீடுகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பூரணப்படுத்தப்படாத நிலையிலுள்ள (Scattered) 149 வீடுகளும், 2015-2019 காலப்பகுதித் திட்டத்தின் கீழ், பூரணப்படுத்தப்படாமல் எஞ்சியிருந்த, 101 வீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.
இதன்போது திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான எஸ்.சுதாகரன், ஜெ. ஸ்ரீபதி(காணி), தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் நிமல் ராஜசிங்க, மாவட்ட செயலக அதிகாரிகள், வீடமைப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
வீடமைப்பு திட்டத்தின் 1ஆம் கட்ட பயனாளிகளுக்கு காசோலை வழங்கல் சொந்தமாக இருக்க இடம், ஒரு அழகான வாழ்க்கை” எனும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் விசேட திட்டத்தின் கீழ், 2026 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இன்று(30) நடைபெற்றது.தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் (NHDA) திருகோணமலை மாவட்டக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்தனர்.இன்றைய தினம் முதலாம் கட்டமாக 80 வீடுகளுக்கான பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதற்கான 150,000 ரூபாவுக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக, இந்தத் திட்டத்தின் கீழ் 69 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.திருகோணமலை மாவட்டத்தில் வீடமைப்புத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் கீழ், மொத்தமாக 250 வீடுகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதில் பூரணப்படுத்தப்படாத நிலையிலுள்ள (Scattered) 149 வீடுகளும், 2015-2019 காலப்பகுதித் திட்டத்தின் கீழ், பூரணப்படுத்தப்படாமல் எஞ்சியிருந்த, 101 வீடுகளும் உள்வாங்கப்பட்டுள்ளன.இதன்போது திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான எஸ்.சுதாகரன், ஜெ. ஸ்ரீபதி(காணி), தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் நிமல் ராஜசிங்க, மாவட்ட செயலக அதிகாரிகள், வீடமைப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.