• Nov 17 2024

மரம் ஏறுதலின் போது ஏற்பட்ட நெஞ்சுவலி -உயிர்நீத்தவரின் குடும்பத்தினருக்கு வாழ்வாதார நிதி உதவி!

Tamil nila / Jun 8th 2024, 6:46 pm
image

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் கருங்காலிச்சோலை பேத்தாழையில் அண்மையில் நடைபெற்ற  கிராமிய கலாச்சார விளையாட்டு நிகழ்வின்போது வழக்கு மரம் ஏறுதலின் போது ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக உயிர்நீத்தவரின் குடும்பத்தினரின் நன்மை கருதி இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னனியினரால் வாழ்வாதார நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.

பேத்தாழை இலங்கை தமிழரசு கட்சியின் வட்டாரத் தலைவர் வெ.பிறைசூடியின் வேண்டுகோளுக்கிணங்க  இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் முன்னனி தலைவர் க.சோபனன் இவ் உதவி தொகையினை வழங்கி வைத்தார்.கட்சியின் ஆதரவாளர்களிடமிருந்து திரட்டபட்ட நிதியே இவ்வாறு வழங்கி வைக்க்பட்டது.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,முன்னாள் மாநகர முதல்வர் தி.சரவணபவன் உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதேவேளை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தின்; பிள்ளைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கை மற்றும் வீடு திருத்துதல் தொடர்பாக உதவும் பொருட்டு கலந்துரையாடப்பட்டது.



மரம் ஏறுதலின் போது ஏற்பட்ட நெஞ்சுவலி -உயிர்நீத்தவரின் குடும்பத்தினருக்கு வாழ்வாதார நிதி உதவி வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் கருங்காலிச்சோலை பேத்தாழையில் அண்மையில் நடைபெற்ற  கிராமிய கலாச்சார விளையாட்டு நிகழ்வின்போது வழக்கு மரம் ஏறுதலின் போது ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக உயிர்நீத்தவரின் குடும்பத்தினரின் நன்மை கருதி இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னனியினரால் வாழ்வாதார நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.பேத்தாழை இலங்கை தமிழரசு கட்சியின் வட்டாரத் தலைவர் வெ.பிறைசூடியின் வேண்டுகோளுக்கிணங்க  இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் முன்னனி தலைவர் க.சோபனன் இவ் உதவி தொகையினை வழங்கி வைத்தார்.கட்சியின் ஆதரவாளர்களிடமிருந்து திரட்டபட்ட நிதியே இவ்வாறு வழங்கி வைக்க்பட்டது.இதன் போது மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,முன்னாள் மாநகர முதல்வர் தி.சரவணபவன் உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.இதேவேளை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தின்; பிள்ளைகளின் எதிர்கால கல்வி நடவடிக்கை மற்றும் வீடு திருத்துதல் தொடர்பாக உதவும் பொருட்டு கலந்துரையாடப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement