இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடாவின் அரசியல் மற்றும் வர்த்தகத்திற்கான ஆலோசகர் டானியல் வூட் இன்று காலை யாழ்ப்பாண நூல் நிலையத்திற்கு விஜயம் செய்தார்.
நூல் நிலையத்திற்கு விஜயம் செய்த கனடா தூதரக ஆலோசகரை யாழ் மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் வரவேற்றார்.
அதனை தொடர்ந்து நூல் நிலையத்தை கனடா தூதரக ஆலோசகர் பார்வையிட்டதுடன் நூல் நிலையத்தில் அமைந்துள்ள இந்தியன் கோனரையும் பார்வையிட்டார்.
இதன்போது நூல் நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பில் யாழ் மாநகர ஆணையாளர் கனடா தூதரக ஆலோசகருக்கு எடுத்து கூறினார்.