மத்திய மாகாணத்தின் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட 2,142 சிறுவர்கள் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டுடன் மத்திய மாகாணத்தில் நிலவும் போசாக்கின்மை நிலைமை தொடர்பில் 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அணுகல் சட்டத்தின் பிரகாரம் மாகாண சுகாதார திணைக்களம் விடுத்துள்ள தகவலுக்கான கோரிக்கைக்கு வழங்கப்பட்ட தகவலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் திணைக்களம் வழங்கிய தகவலின்படி, மாகாணத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட 2142 சிறுவர்கள் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்,
15,920 குழந்தைகள் மிதமான போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 27,812 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் 11,044 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 4051 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 12,717 பேரும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த புள்ளிவிபரங்களின்படி நுவரெலியா மாவட்டத்திலே அதிகளவான ஊட்டச்சத்து குறைபாடுள்ள சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுளின்றது.
கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் வெளியான அதிர்ச்சித் தகவல் மத்திய மாகாணத்தின் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட 2,142 சிறுவர்கள் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.2023ஆம் ஆண்டுடன் மத்திய மாகாணத்தில் நிலவும் போசாக்கின்மை நிலைமை தொடர்பில் 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அணுகல் சட்டத்தின் பிரகாரம் மாகாண சுகாதார திணைக்களம் விடுத்துள்ள தகவலுக்கான கோரிக்கைக்கு வழங்கப்பட்ட தகவலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார சேவைகள் திணைக்களம் வழங்கிய தகவலின்படி, மாகாணத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட 2142 சிறுவர்கள் கடுமையான போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்,15,920 குழந்தைகள் மிதமான போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 27,812 ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கண்டி மாவட்டத்தில் 11,044 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 4051 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 12,717 பேரும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்நிலையில், குறித்த புள்ளிவிபரங்களின்படி நுவரெலியா மாவட்டத்திலே அதிகளவான ஊட்டச்சத்து குறைபாடுள்ள சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுளின்றது.