• Oct 11 2024

கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்ப பெண்...! தமிழர் பகுதியில் துயரம்..!

Sharmi / Jul 29th 2024, 1:37 pm
image

Advertisement

ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகர பகுதியில் கிணற்றிலிருந்து இளம் குடும்பப் பெண் இன்று(29) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணை நேற்று இரவு தொடக்கம் காணவில்லையென வீட்டார் மற்றும் அயலவர்கள், கிராமத்தவர்கள் இணைந்து தேடுதல் நடத்தியும் எங்கும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இன்று (29) காலை வீட்டு கிணற்றுக்குள் இருந்து சடலமாக இருப்பதனை அவதானித்த குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர் .

குறித்த சம்பவத்தில் 30 வயதுடைய இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் திருமணமான பின்பு கணவருடைய வீட்டில் மாமன் மற்றும் மாமியுடன் வசித்து வந்ததாகவும், அவருக்கு 5 வயதுடைய ஒரு மகளும் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை உயிரிழந்த பெண்ணின் கணவர் புலம்பெயர் நாடு ஒன்றில் வசித்து வருகின்ற நிலையில் இளம் குடும்ப பெண்ணின் மரணம் குறித்து சமூகத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 

இந்நிலையில் உயிரிழந்த குடும்ப பெண்ணின் உடலம் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்ப பெண். தமிழர் பகுதியில் துயரம். ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகர பகுதியில் கிணற்றிலிருந்து இளம் குடும்பப் பெண் இன்று(29) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த பெண்ணை நேற்று இரவு தொடக்கம் காணவில்லையென வீட்டார் மற்றும் அயலவர்கள், கிராமத்தவர்கள் இணைந்து தேடுதல் நடத்தியும் எங்கும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இன்று (29) காலை வீட்டு கிணற்றுக்குள் இருந்து சடலமாக இருப்பதனை அவதானித்த குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர் .குறித்த சம்பவத்தில் 30 வயதுடைய இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த பெண் திருமணமான பின்பு கணவருடைய வீட்டில் மாமன் மற்றும் மாமியுடன் வசித்து வந்ததாகவும், அவருக்கு 5 வயதுடைய ஒரு மகளும் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை உயிரிழந்த பெண்ணின் கணவர் புலம்பெயர் நாடு ஒன்றில் வசித்து வருகின்ற நிலையில் இளம் குடும்ப பெண்ணின் மரணம் குறித்து சமூகத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த குடும்ப பெண்ணின் உடலம் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement